Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (18-09-2019)!

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (18-09-2019)!
, புதன், 18 செப்டம்பர் 2019 (05:00 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேஷம்      
இன்று ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்புகள் அமையும். சிற்சில தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ அனுகூலம் கிட்டும். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் அகலும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். நீங்கள் எதிர்ப்பவர்களை வெற்றி கொள்வீர்கள்.  பணவரத்து அதிகரிக்கும். எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள், 1, 9

ரிஷபம்      
இன்று சாதகமான பலன்கள் உண்டாகும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். சகோதர சகோதரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பேச்சில் சாமர்த்தியம் கூடும். வருமானம் திருப்தி அளிக்கும். பிள்ளைகள் பெருமை அடைவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6

மிதுனம்     
இன்று மகிழ்ச்சியும், திருப்தியும் குடிகொண்டிருக்கும். சிறு பிரச்சினைகள் வந்தாலும் அதை தக்க தருணத்தில் சமாளித்து விடுவீர்கள். வியாபாரத்திற்காக கடன்கள் ஏதும் வாங்கியிருந்தால் அதை இன்று தீர்த்து விடுவீர்கள்.குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கும் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா காரியங்களும் நல்ல படியாக நடக்கும். எடுத்து கொண்ட வேலைகளில் இருந்த பிரச்சனைகள் தீரும். ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கடகம்
இன்று மகிழ்ச்சியான நாள். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் குடிகொண்டிருக்கும். மேலிடத்தில் நற்பெயர் கிடைக்கும். வெளியூர் பிரயாணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். தொழில் ரீதியான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். வீண் செலவு ஏற்படும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். எதிலும் கவனமாக இருப்பது நன்மை தரும். பணவரத்தை அதிகப்படுத்தும். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட் எண்கள்: 2, 3

சிம்மம்      
இன்று சுப நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். எக்காரணத்தைக் கொண்டும் மற்றவர்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். சக பாகஸ்தர்களுடன் பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தால் இப்போது சரியாகி நல்லிணக்கம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம். வீண் அலைச்சல் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கன்னி
இன்று திருமண முடிவுகள் பற்றிய பேச்சு வார்த்தை வெற்றியளிக்கும். கணவன் - மனைவியரிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு வேளைகளில் இருந்த பிரச்சினைகள் தீரும். பண வரவு திருப்தி அளிக்கும். மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும்.  கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலிடத்திடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. வீண் அலைச்சல், தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது.
 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, இளநீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

துலாம்
இன்று வெளிநாடு செல்ல விரும்புவோர் ஏற்றுமதி -  இறக்குமதி தொழில் செய்வோர் லாபம் அடைவர். முக்கிய பதவி கிடைத்து அதில் சந்தோஷம் அடைவீர்கள். வருமானம் திருப்தி அளிக்கும்.வீண் அலைச்சல் ஏற்படலாம். அவசரப்படாமல்  நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். எதிர்ப்புகள் விலகும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உடல் நல பாதிப்பு ஏற்படலாம். ஏற்கனவே செய்த ஒரு செயலை நினைத்து வருந்த நேரிடும். பயணங்கள் செல்ல நேரிடலாம். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளமஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

விருச்சிகம்  
இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பானவழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத்தேவை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். வேலை இடத்தில் அனுகூலமான சூழ்நிலை காணப்படும். பெண்களுக்கு வருமானம் திருப்தி தரும். மாணவர்களுக்கு கிரகிக்கும் ஆற்றல் பெருகும்.  வெளிநாடு வாய்ப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 9

தனுசு
இன்று தன்னம்பிக்கையும் ஊக்கமும் அதிகரிக்கும். தாயாரால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். பழைய இடங்களை விற்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் நடைபெறாமல் தள்ளிப் போன சுபகாரியங்கள் இனிதே நடைபெறும்.பணவரத்து கூடும். ஏற்கனவே செய்த ஒரு காரியத்தின் பலன் இப்போது கிடைக்கும். திடீர் மனவருத்தம் ஏற்படலாம். மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது.எல்லா நன்மைகளும் உண்டாகும். மன துயரம் நீங்கும். சிற்றின்ப செலவு அதிகரிக்கும். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இளம்பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மகரம்
இன்று யாரிடமும் கோபப்பட்டு பேசி பகைமைய வளர்த்துக் கொள்ளாதீர்கள். குழந்தைகளின் நலன் கருதி எதிர்காலத்திற்குத் தேவையானவற்றை முதலீடு செய்வீர்கள். உடல் சோர்வும் அசதியும் காணப்படும்.  நேரம் கிடைக்கும் போது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.குடும்பத்தில் ஏதாவது வீண் விவகாரங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். பிள்ளைகளுக்காக கூடுதலாக பாடுபட வேண்டி இருக்கும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்கள், 3, 7

கும்பம்
இன்று அனுகூலமான நாள். ஆனால் மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எக்காரணத்தைக் கொண்டும் கடன் வாங்க வேண்டாம். முக்கிய நபர் ஒருவரை சந்தித்து உரையாடுவீர்கள். அவர்களால் உங்களுக்கு எதிர்காலத்திற்கு நன்மைதான். வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். அதே நேரத்தில் அதற்கான கூடுதலாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவு ஏற்படும்.தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும். பணவரத்து சீராக இருக்கும். ஆர்டர்கள் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. போட்டிகள் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, கருநீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

மீனம்
இன்று மேலதிகாரிகள் ஒத்துழைப்பு கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதரவு கிடைக்கும். யாரிடமும் அவசரப்பட்டு பேசி பின்பு வருந்த வேண்டாம். பகல் முழுதும் வேலைப்பளு இருப்பதால் இரவில் நல்ல தூக்கம் வரும்.உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சக ஊழியர்களிடம் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு செயல்பட வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைக்கும் உதவி தாமதப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்,வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (17-09-2019)!