Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (13-09-2019)!

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (13-09-2019)!
, வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (05:00 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேஷம்      
இன்று வருமானத்தில் ஏற்றத் தாழ்வு வரக்கூடும். பிள்ளைகளில் வழியில் மருத்துவச் செலவு வரலாம். அதனால் மனநிம்மதியிழந்து காணப்படுவீர்கள். செய்யும் பணிகளில் தொய்வு வரலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மைதரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை. வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

ரிஷபம்      
இன்று சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் தங்களிடம் பணியாற்றும் ஆட்களின் நலன் கருதி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பழைய கடன்களை அடைத்து நிம்மதி பெருமூச்சு அடைவீர்கள். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வாகனங்களை  ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள். தொழில் வியாபாரம்  சுமாராக நடக்கும்.  ஆர்டர்கள் கிடைத்தாலும்  சரக்குகள் அனுப்புவது  தாமதமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

மிதுனம்     
இன்று கிரகிப்புத் திறமை நல்ல படி இருக்கும். அதனால் சில வேலைகள் சுலபமாக முடியும் அளவுக்கு உங்களின் திறமை இருக்கும். ஆனாலும் மனதில் ஏதோ ஒன்று உருத்திக் கொண்டிருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில்  இருப்பவர்கள் மிகவும் கவனமாக  பணிகளை  மேற்கொள்வது நல்லது. பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது  தாமதப்படும். குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே  கருத்து வேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் நிதானமாக  பேசுவது நல்லது.  பிள்ளைகளை அனுசரித்து செல்வது நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கடகம்
இன்று பிறர் செய்யும் தவறுக்கு நீங்கள் பொறுப்பாவீர்கள். அதனால் உங்களுக்கு மனநிம்மதியும், மகிழ்ச்சியும் தான்.  போட்டிகள் இருப்பினும் அதை எளிதில் வென்று விடுவீர்கள். பெற்றோருக்கு பெருமை ஏற்படும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.  பயணங்களின் போது உடமைகளை  கவனமாக  பார்த்துக் கொள்வது நல்லது. வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். களைப்பு, பித்தநோய் உண்டாகலாம். வீண்கவலை இருக்கும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டார தொடர்புகளில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

சிம்மம்      
இன்று கடின உழைப்பு ஏற்பட்டாலும் மொத்தத்தில் வெற்றிகரமான நாளாக அமையும். தொழில் வியாபாரம் தொடர்பான  அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை  அனுசரித்து செல்வது நல்லது.  பழைய பாக்கிகளை  வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருப்பதால் குறித்த நேரத்தில் கொடுக்கப்பட்ட வேலைகளை செவ்வனே செய்வீர்கள். வெளியூர் பயணம் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கன்னி
இன்று புதிதாக திட்டமிடும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும். பெண்கள் இன்று அதிக செலவுகளை செய்து குறைந்த மதிப்புள்ள பொருட்களை வாங்க நேரிடும். தூக்கமின்மையால் அவதிப்பட நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

துலாம்
இன்று செல்வாக்கும், சொல்வாக்கும் நிறைந்து காணப்படும். முக்கிய விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஏனெனில் அது உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும். குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன்  உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம்விட்டு பேசுவது நல்லது.  பிள்ளைகள்  நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.  எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

விருச்சிகம்  
இன்று ஆலய தரிசனம் செய்யும் நாள். பழைய சொத்துக்களை விற்று விட்டு புதிதாக வாங்க வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். சிறு வியாபாரிகள் கூட தங்கள் தொழிலை பெரிது பண்ண வேண்டும் என்ற எண்ணத்தில் முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும். பிள்ளைகள் அறிவுத் திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள். அவர்களுக்காக செலவு செய்யவும் நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

தனுசு
இன்று வெற்றிகரமான நாள். ஆனால் ஆரோக்கியத்தில் சின்ன சின்ன குறைபாடுகள் வந்து போகும். மிகச் சிலரே உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவார்கள். பெண்களுக்கு சந்தோஷமும், மன நிறைவும் ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது  நல்லது. அவர்களின் நலனுக்காக  செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில்  திடீர் இடைவெளி ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.  வாக்குவன்மையால் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மகரம்
இன்று பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது. மேலிடத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். பெற்றோர் குழந்தைகளின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை காணப்படும்.   கணவன், மனைவி இருவரும் சேர்ந்து  எடுக்கும் முடிவுகள்  நல்ல பலன் தருவதாக இருக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும்.  எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக  தள்ளிப்போன பதவி உயர்வு வர வேண்டிய பணம் வந்து சேரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

கும்பம்
இன்று சிறு விஷயத்திற்காக கூட மனம் வருத்தப்பட்டு கொண்டிருப்பீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் சிலவற்றை வாங்குவீர்கள். சில தடைகள் தொழில் ஏற்பட்டாலும் அது பெரிய அளவில் உங்களை பாதிக்காது. குடும்ப நிர்வாகம் பிரச்சினை இராது. பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.  சாமர்த்தியமான பேச்சின் மூலம் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள்.  சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறை காண்பார்கள்.  வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

மீனம்
இன்று உற்சாகமான நாள். உங்கள் உயிருக்கு ஆபத்தான விளையாட்டுகள் எதிலும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாம். வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல நேரலாம்.  வீண் கவலைகளை விட்டு விடுங்கள். எண்ணியதை செய்து முடிக்க முடியாமல் தடங்கலை உண்டாக்கும். பணவரத்து கூடும். தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள். புதிய ஆர்டர் பிடிக்க அதிகம் அலையவேண்டி இருக்கும்.குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே  இடைவெளி குறைய மனம் விட்டு பேசுவது நல்லது. பிள்ளைகள் எதிர்கால நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பசுவுக்கு இவ்வாறு செய்வதால் பித்ரு தோஷங்கள் நீங்குமா...?