Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (02-01-2019)!

Advertiesment
இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (02-01-2019)!
, புதன், 2 ஜனவரி 2019 (05:00 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான் நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்:
இன்று மற்றவர்கள் ஒப்படைத்த வேலையை பொறுப்போடு செய்து முடிப்பீர்கள். தேவையற்ற மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனை வராமல் தடுக்கலாம். சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பண தேவை உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

ரிஷபம்:
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
 
மிதுனம்:

இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷன் தருவதாக இருக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வதும் அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பதும் நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

கடகம்:
இன்று கோபத்தை கட்டுப் படுத்துவதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். வீண் செலவை தடுக்க திட்டமிட்டு செயல் படுவது நல்லது. மாணவர்கள் சக மாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மிகவும் பொறுமையுடனும், கவனமாகவும் பாடங்களை படிப்பது அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

சிம்மம்:
இன்று சாமர்த்தியமாக செயலாற்றுவீர்கல். சில நேரத்தில் இடம், பொருள் தெரியாமலும் செயல்பட்டு விடுவீர்கள். மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பேச்சின் இனிமையால் காரிய வெற்றி உண்டாகும். எதிலும் தாமதமான போக்கு காணப்படும். 
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

கன்னி:
இன்று எதிர்ப்புகள் விலகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தமான போக்கு மாறும். வேகம் பிறக்கும். கடன் பிரச்சனை தீரும். போட்டிகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்க பெறுவார்கள்.  இடமாற்றத்துடன்  பதவி உயர்வு சிலருக்கு கிடைக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

துலாம்:
இன்று குடும்பபிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே மனகசப்பு நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான  பொருட்களை வாங்க நினைப்பீர்கள். எதிர்பாராத திருப்பங்களால் திடீர் நன்மை உண்டாகும். 
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

விருச்சிகம்:
இன்று எதிர்ப்புகள்  விலகும். காரிய தடை தாமதம் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த பிரச்சனைகள் தீரும்.  முடிவு எடுக்க முடியாமல் இழுபறியாக இருந்த விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பிரவுண்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

தனுசு:
இன்று புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. இழுபறியாக பாதியில்  நின்ற காரியம் நன்கு நடந்து முடியும். விரும்பிய  காரியத்தை நிறைவேற்ற  தேவையான மனோ பலம் கிடைக்கும். வராமல் நின்ற பணம் கைக்கு வந்துசேரும். புதிய நபர்களின் நட்பும், அதனால் மன மகிழ்ச்சியும் ஏற்படும். மதிப்புகள் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7

மகரம்:
இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.  வேலைபளு குறையும். திறமையான பேச்சின் மூலம் சக ஊழியர்களின் நட்பை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

கும்பம்:
இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.  கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் மனதில் ஏதாவது குறை இருக்கும் வெளிக்காட்டமாட்டீர்கள். பிள்ளைகளுடன்  அனுசரித்து செல்வது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

மீனம்:
இன்று மனோ தைரியம் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த  பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். பாடங்கள் படிப்பதில் தீவிர கவனம் செலுத்துவீர்கள். காரிய தடை தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (01-01-2019)!