Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராகு 7ஆம் இடத்தில் உள்ளதால் திருமணம் தள்ளிப் போகிறது? இதற்கு என்ன பரிகாரம்?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

Advertiesment
ராகு திருமணம் பரிகாரம் ஜாதகம் லக்னம் ராகு
, செவ்வாய், 21 ஏப்ரல் 2009 (17:58 IST)
ஜாதகத்தில் ராகு 7ஆம் இடத்தில் இருப்பதாக இந்த வாசகர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பிறந்த தேதி எதையும் குறிப்பிடவில்லை. என்ன லக்னம் என்பதும், ராகு எந்த வீட்டில் இருக்கிறது என்பதும் தெரியவில்லை. 7ஆம் இடத்து ராகுவை எந்த கிரகம் பார்க்கிறது என்பதையும் அவர் கூறவில்லை.

பொதுவாக 7இல் ராகு உள்ளதால் அவர் சர்ப்ப சாந்தி செய்து கொள்ளலாம். ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வழிபடுவது எல்லா வகை சர்ப்ப தோஷங்களுக்கும் நல்லது. அங்குள்ள ராமானுஜரையும் வழிபட வேண்டும். ஆதிஷேசனின் மறுவடிவமாகவே ராமானுஜர் கருதப்படுகிறார். சர்ப்பங்களின் தலைவன் ஆதிஷேசன் என்பதால் ராமானுஜரை வழிபடுவதும் நல்ல பலனைத் தரும்.

ராகு 7இல் இருந்து திருமணம் தள்ளிப்போனால் விதவைப் பெண் அல்லது விவாகரத்து பெற்ற பெண் அல்லது முற்போக்கு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பிறந்த பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம். வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

இதேபோல் வசதி குறைவான இடத்தில் பெண் எடுப்பதும், தங்களுடைய ஜாதியை விட்டு வேறு ஜாதியிலும் (உட்பிரிவு) பெண் எடுப்பதும் நல்ல பலனைக் கொடுக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil