ஹிட்லர், இடிஅமீன், ராஜபக்ச போன்றவர்களுக்கு என்ன தோஷம் ஏற்படும்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:
ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவிப்பவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இது மிகக் கடுமையான தோஷமாகக் கருதப்படுகிறது.
பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டால் அது அவர்களை மட்டுமின்றி, அவர்களின் சந்ததிகளையும் பல தலைமுறைக்கு பாதிக்கும். பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டால் அந்த ஜாதகர் ஏழேழு ஜென்மம் (7x7= 49 ஜென்மம்) எடுக்க வேண்டியிருக்கும் என்றும், அவர் நாயாய், பேயாய், நரியாய் என பல இழிபிறவிகளையும் எடுக்க வேண்டுயிருக்கும் என்றும் நூல்கள் கூறுகின்றன.