Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விக்கிலீக்ஸ்: அமெரிக்காவின் நிலை என்ன ஆகும்?

Advertiesment
விக்கிலீக்ஸ்
, புதன், 5 ஜனவரி 2011 (17:54 IST)
தமிழ்.வெப்துனியா.காம்: விக்கிலீக்ஸ், எல்லா நாடுகளுடைய ரகசியங்கள், அறிக்கை பரிமாற்றங்கள் அனைத்தையும் வெளியிட்டு வருகிறார்கள். இது பெரிய அளவில் மக்களிடைய கருத்து மாற்றத்தை உருவாக்கி வருகிறது. எப்படி ஒவ்வொரு நாடும் அவர்களுடைய ரகசியங்கள் தெரிந்தும் செயல்படாமல் இருந்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் காட்டுகிறது. இதுபோல பல்வேறுபட்ட ரகசியங்களையெல்லாம் வெளியிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார் அதன் நிறுவனர் ஜூலியன் அசாங்கா. குறிப்பாக அமெரிக்காவின் வங்கிகளைப் பற்றியெல்லாம் கூட. அப்படி அவர் வெளியிடக்கூடிய விவரங்களால் அமெரிக்காவின் அரசியல் நிலை உலக அளவில் பாதிக்கப்படுமா? என்ன ஆகும்?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: ஜோதிடப்படி அமெரிக்கா குரு ஆதிக்கத்தில் இருக்கக்கூடிய நாடு. தற்போது தனுர் ராசி அமைப்பில் வரக்கூடிய நாடு. அதற்கு தற்போது மோசமான காலகட்டம் இது. தற்போது குரு நல்ல இடத்திற்கு வந்திருக்கிறார். இருந்தும் தனுசு ராசிக்கு அது சாதகமான இடம் கிடையாது.

16.05.2011க்குப் பிறகு அமெரிக்காவினுடைய நிலை ஓங்கும். அதுவரைக்கும் மோசமான பாதிப்புகள் அமெரிக்காவிற்கு உண்டாகும். அதாவது பெரிய தலைக்குனிவு, அதிபருக்குக் கூட ஆபத்து வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

முன்பு இருந்ததை விட பொருளாதாரம் முன்னேறும். ஆனாலும் பொருளாதார நெருக்கடிகள் இருக்கும். மே மாதம் 16க்குப் பிறகுதான் சில நல்ல மாற்றங்கள் கொடுக்கும். அதுவரைக்கும் பெரிய இழப்புகள், நம்பகத்தன்மை இல்லாமை போன்ற பாதிப்புகளை உண்டாக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil