தமிழ்.வெப்துனியா.காம்: வரலட்சுமி வழிபாடு செய்கிறார்கள். அதேபோல், வரலட்சுமி விரதம் இருந்தால் ஆண் குழைந்தை பிறக்கும் என்றும் கூறுகிறார்கள். இதுபற்றி கூறுங்கள்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: வரலட்சுமி என்பது என்ன, வரன் தரும் லட்சுமி, வரக்கூடிய லட்சுமி. மகாலட்சுமி எனப்படும் பெரிய சக்தியாக சொல்லப்படுகிறது. அந்த லட்சுமி நோன்பு விரதம் இருக்கும் போது எதை நாம் கேட்டாலும் கிடைக்கும். அது சத்புத்திரன், அதாவது சந்தான பாக்கியம். ஆண் குழைந்தை வேண்டும் என்று கேட்டாலும் சரி, அல்லது வீடு வேண்டும், வாடகை வீடு வருடா வருடம் மாற்றி அவதிக்குள்ளாக வேண்டியுள்ளது என்று கேட்டாலும் சரி.
இதுபோன்று ஒவ்வொருத்தருடைய சங்கல்பமும், வேண்டுதல்களும் வெவ்வேறாக இருக்கும். நோன்பிருத்தல், விரதம் போன்றது என்பது, ஒரே எண்ணத்தில் இடைவிடாது இருத்தல், ஒரே சிந்தனையில் இருத்தல், மனதை ஒன்றின் மீதே நிலை நிறுத்துதல். இதுதான் விரதங்களுடைய வெளிப்பாடு. மற்றவைகளில் எண்ணச் சிதறல்கள் நிறைய இருக்கும். விரதம் இருக்கும் போது எண்ணச் சிதறல்கள் குறையும். அதில் வரலட்சுமி நோன்பு என்பது மிக மிக விசேஷமானது. அதில் எதைக் கேட்டு விரதம் இருந்தாலும் அது நிறைவேறும்.