பணியில் சலிப்பு ஏற்படுவது ஏன்?
, திங்கள், 31 அக்டோபர் 2011 (17:09 IST)
தமிழ்.வெப்துனியா.காம்: பல ஆண்டுகளாக செய்துவரும் பணியில் திடீரென சலிப்பு ஏற்படுவது ஏன்? அது அனுபவ ரீதியிலானதா? அல்லது ஜோதிட காரணங்களா? இப்படி சலிப்பு ஏற்படுவது மாற்றத்திற்கான அல்லது எதிர்காலத்திற்கான ஒரு அறிகுறியாகக் கொள்ளலாமா?ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: நாம் தொடர்ந்து செய்துவரும் பணியில் ஒரு சலிப்பு ஏற்படுகிறது என்றால் அதற்குக் காரணம் சந்திரனும் புதனும்தான். ஏனெனில் இவர்கள் இருவரும்தான் நமது அன்றாட பணிகளுக்கானவர்களாவர். புதன் கிரகமானது அது எந்தப் பணியானாலும் சரி, அதில் உற்சாகத்தையும், புதுமையையும் புகுத்தக் கூடியது. அப்படியான பணிக்கு நமது மனத்தையும், உடலையும் தயார்படுத்துவது சந்திரன். இந்த இரண்டு கிரகங்களும் ஒருவருடைய ஜாதகத்தில் பலவீனமாக இருந்தால் அவர்களுக்கு அடிக்கடி சோர்வும், சலிப்பும் ஏற்படும். இது வேலை மாறுதல் போன்றவற்றைக் கூட ஏற்படுத்தக் கூடும். ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் வலிமையாக இருந்துவிட்டால் தொடர்ந்து அந்தப் பணியை நீண்ட காலமாகச் செய்வார்கள். இப்ப ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திரன் உச்சமாகிறது, வலுவடைகிறது. கடக ராசிக்காரர்களுக்கு சந்திரன் ஆட்சி பெறுகிறது. இவர்களையெல்லாம் பார்த்தீர்களானால் ஏதாவது ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் வெவ்வேறு நிலைகளை அடைவார்கள். இவர்களுக்கு குறிக்கோளும் உருவாக்கமும் ஒன்றாகவே இருக்கும். வெவ்வேறு நிலைகள் என்று சொல்வார்கள் அல்லவா? அவரு மிகச் சாதாரணமாக ஆரம்பிச்சாருங்க, இப்ப எங்கேயோ போயிட்டார் என்று கூறுவார்களே, அதுதான். முதல்ல இங்கேதான் தொடங்கினார், அப்புறம் அந்த மாநிலத்தில் தொடங்கினார், இப்போ அயல் நாட்டில் தொடங்கி ஒகோ என்று வளர்ந்துள்ளார் என்று கூறுவார்கள். இது ஒரு தொடர்ச்சி, அதாவது கன்டினியூட்டி இருக்கும். எந்த பணியைத் தொடங்கிறார்களோ அதே பணியில் உச்சத்தை எட்டுவார்கள். இது சந்திரனின் பலம்தான். இதில் புதனும் வலுவடையும்போது சலிப்பும் சோர்வும் இருக்காது.இந்த இரண்டு கிரகங்களும் ஜாதகத்தில் வலுவிழக்கும்போதோ அல்லது இந்த இரண்டு கிரகங்களுக்கு எதிரான கிரகங்களின் பார்வைக்குள் வரும்போதோ அவர்களுக்கு சோர்வும் சலிப்பும் தானாகவே வரும். அப்போதுதான், மாறினால் என்ன? மாடு போல் உழைக்கிறோம், எந்தப் பலனும் இல்லை என்பது போன்ற சிந்தனைகள் வரும். விடுமுறை எடுத்துக்கொள்ளலாமா? அல்லது வேறு ஏதாவது முயற்சியில் ஈடுபடலாமா? என்றெல்லாம் தோன்றும். இதனை எதிர்காலம் தொடர்பான அறிகுறியாகவும் கொள்ளலாம். ஏனெனில், இந்த இரண்டு கிரகங்களையும் தாண்டிய ஒரு யோக திசை வரும்போது, இப்போதுள்ள பாதையில் இருந்து புதிய பாதைக்கு மாறி செழிப்பான ஒரு நிலைக்கு கொண்டு செல்லலாம். ஆனால் இதனை ஒரு உறுதியான அறிகுறியாகக் கொள்ள முடியாது.