Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

த‌மி‌ழ்நா‌ட்டி‌ற்கு கட‌ற்கோ‌ள் ஆப‌த்து உ‌ள்ளதா?

Advertiesment
த‌மி‌ழ்நா‌ட்டி‌ற்கு கட‌ற்கோ‌ள் ஆப‌த்து உ‌ள்ளதா?
, திங்கள், 26 டிசம்பர் 2011 (16:18 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌‌னியா.கா‌ம்: தமிழரின் வரலாற்றில் தமிழ்நாட்டை இரண்டு பெரும் கடல் கோள்கள் தாக்கி அழித்ததாகக் கூறப்படுகிறது. தென் மதுரை, கபாடபுரம் போன்ற பண்டைய தமிழ்நாட்டின் தலைநகரங்கள் அப்படிப்பட்ட கடற்கோள்களால் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அப்படி ஒரு பெரும் அழிவு எதிர்காலத்தில் ஏற்படும் சாத்தியம் ஜோதிடப்படி உள்ளதா?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: ஆமாம் இருக்கிறது. பூம்புகாரைப் பற்றி பண்டைக்கால பழைய நூல்களில் அதனுடைய செழிப்பைப் பற்றியெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. அதுபோல கடல் கோளுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. சனி பகவான் டிசம்பர் 21ல் இருந்து துலாத்தில் வந்து உட்கா‌ர்‌‌ந்‌திரு‌க்‌கிறார். இதே காலகட்டத்தில் அடுத்த வருடம் மே மாதத்தில் இராகுவும் சனியுடன் சேருகிறார்.

இதுபோன்று இரண்டு பாவகிரகங்கள் சேரும் போது நிறைய பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும், சாத்தியக்கூறுகளும் உண்டு. 2012 மே மாதத்தில் இருந்து சனியும், இராகுவும் ஒன்று சேர்வதால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். திடீரென சில நகரங்கள் இருந்த இடம் தெரியாமல் ஆவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதனால், இந்த‌ச் சனி மாற்றம் தென் இந்தியாவிற்கு அவ்வளவு நல்லதல்ல. தென் இந்தியா அரசியல் ரீதியாகவும், இயற்கை ரீதியாகவும் எல்லா வகையிலுமே பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil