தமிழ்.வெப்துனியா.காம்: இன்னும் 4 மாதங்கள்தான் தேர்தல் முன்னேற்பாடுகளுக்கான காலம். இந்நிலையில், இந்தத் தேர்தல் யாருக்குச் சாதகமாக இருக்கும்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: தமிழ்நாடு ஜாதகத்தை எடுத்துப் பார்க்கும் போது, தமிழ்நாட்டிற்கு வெள்ளி (சுக்ரன்) மிகவும் முக்கியமானவர். இந்திய ஜாதகத்திற்கு சுக்ரன் முக்கியமானவர்.
தற்பொழுது சுக்ரன் வக்கிரமாகிக் கிடக்கிறார். இவர் வக்கிர நிலையில் இருந்து விலகும் போதுதான் தெளிவான முடிவுகள் கிடைக்கும்.
ஏனென்றால், தற்பொழுது சுக்ரன் தன்னுடைய வக்கிர நிலையில் இருந்து மாறவில்லை. அதற்கான காலகட்டம் கொஞ்சம் தாமதமாகத்தான் வருகிறது. இதன்படி பார்த்தால், ஜனவரி மாதம் 2ஆம் தேதிதான் சுக்ரன் வக்கிர நி¨லியில் இருந்து மாறுகிறார். அதன்பிறகுதான் தமிழக அரசியலில் சூடு பிடிக்கும். தெளிவு பிறக்கும், தேர்தல் கூட்டணி மாற்றங்கள் போன்றவை நடக்கும்.
அடுத்தடுத்த பெரிய பெரிய நிகழ்வுகள் அரங்கேறப் போவது 2011ல்தான். ஏனென்றால் ஜனவரி 2ஆம் தேதிக்குப் பிறகுதான் சுக்ரன் மாறுகிறார். அதன்பிறகுதான் பலருடைய உள் மனதில் இருக்கக் கூடிய விஷயங்கள் எல்லாம் வெளிவரும்.