ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் அடுத்தடுத்து 3 கிரகணங்கள் வருவதால் பாதிப்பு ஏற்படுமா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:கிரகங்களின் இயல்புநிலை பாதிக்கப்படுவதையே கிரகணம் என்று கூறுகிறோம். இதனை செயற்கையான இருட்டு என்றும் கூறலாம். கிரகணத்தைப் பற்றி ஜோதிடத்தில் வரும் பாடல்,அருக்கனையும், சோமனையும் ஐமூன்றே நாளில் நெருக்கியே அரவம் தீண்டினால் மன்னன் மடிவான்மடியாவிட்டால் அன்னம் அரிதாகும்.இதில் அருக்கன் என்பது சூரியன், சோமன் என்றால் சந்திரன். ஒருமுறை கிரகணம் ஏற்பட்ட அடுத்த 15 நாட்களுக்குள்ளாக மீண்டும் கிரகணம் ஏற்பட்டால் அரசாள்பவர்களுக்கு கண்டம் உண்டாகும். அப்படி இல்லாவிட்டால் உணவு பஞ்சம் ஏற்படும் என்பதே மேற்கூறிய பாடலின் பொருள். அந்த வகையில் பார்த்தால் சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டில் இல்லாத நிலையை அடுத்தடுத்து நிகழும் கிரகணங்கள் உருவாக்கலாம். மறைமுகமாக செயல்படக் கூடிய தீவிரவாத அமைப்புகளின் கை ஓங்கும்.