Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிலர் உடல் ஊனமுற்றவர்களாக பிறந்தாலும் உலகப்புகழ் பெறுகிறார்களே?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

Advertiesment
சர வீடுகள்
சர வீடுகளில் (மேஷம், கடகம், துலாம், மகரம்) முக்கியமான கிரகங்கள் அமர்ந்திருந்தால், அந்த ஜாதகர் ஊனமுற்றவர்களாக இருந்தாலும் அவர் உலகப்புகழ் பெறும் வகையில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைப்பார்.

நிறைய ஜாதகங்களில் நல்லது, கெட்டதாக சில கோள்களின் அமைப்பு இருக்கும். உதாரணத்திற்கு மேஷ லக்னத்தை எடுத்துக் கொண்டால் லக்னத்திற்கு 4ல் குரு உச்சமாக இருப்பது விஷேசம் என்றாலும், அந்த குருவுடன் ராகு/கேது/சனி என இவற்றில் யாராவது ஒருவர் சேர்ந்தால் குருவின் உச்ச பலன் முழுமையாகக் கிடைக்காது.

ஒரு சிலர் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார்கள் ஆனால் கால் மட்டும் சற்றே ஊனமாகி விட்டது என்று ஒரு சிலரைப் பற்றிக் கூறுவோம். ஆனால் அந்த ஊனத்தையே தனக்கு சாதகமாக்கிக் கொண்டு நாடே போற்றும் விதத்தில் அவரது முன்னேற்றம் இருக்கும்.

எனவே, ஒரு நல்ல கிரகமும், கெட்ட கிரகமும் ஓரிடத்தில் ஒன்றாக இருந்தால் ஒரு குறையும், ஒரு நிறையும் அவரது வாழ்வில் இருக்கும்.

உதாரணமாக ஒருவர் ஜாதகத்தில் பாக்யாதிபதி, லக்னாதிபதி, பூர்வ புண்ணியாதிபதி ஆகியோர் வலுவடைந்து, மறுபக்கம் பாவ கிரகத்தின் பார்வையோ அல்லது சேர்க்கையோ பெற்றிருந்தால் ஊனம், பெரிய புகழ் இரண்டையும் அவருக்கு கொடுக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil