Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கா‌ங்‌கிர‌ஸ் வெ‌ற்‌றி வா‌ய்‌ப்பு எ‌ப்படி உ‌ள்ளது?

Advertiesment
தமிழக தேர்தல்
, சனி, 19 மார்ச் 2011 (17:35 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌‌னியா.கா‌ம்: நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தலில் காங்கிரஸ் நிற்கும் இடங்களிலெல்லாம் தோற்கடிப்போம் என்று கூறியுள்ளார். நடக்குமா? காங்கிரசின் வெற்றி வாய்ப்புகள் எந்த அளவிற்கு தமிழ்நாட்டில் இருக்கும்.

ஜோ‌திர‌த்னமுனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியினுடைய ஜாதகம் தற்போது மோசமாக இருக்கிறது. மே மாதம் 8ஆம் தேதி வரைக்கும் குரு எல்லாம் மோசமாக இருக்கிறது.

20.12.2011 வரைக்கும் சோனியாவிற்கு அர்தாஷ்டம சனி நடக்கிறது. இது அவருக்கு இழப்புகள், ஏமாற்றங்களைக் கொடுக்கக் கூடியது. மே 16ஆம் தேதி இராகு, கேது மாற்றம் முதல் கொஞ்சம் பரவாயில்லை என்ற அளவில் சில மாற்றங்களைக் கொடுக்கும்.

இது ஒட்டுமொத்த காங்கிரஸ் தலைமையினுடைய கிரக அமைப்பு. தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அமைப்புகள் ஜாதகம் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறது. இவர்கள் வாங்கியிருக்கும் தொகுதிகள் எண்ணிக்கை 63. 6 சுரக்னுடையது, 3 குருவினுடையது. இந்த குருவும் சுக்ரனும் எப்போதுமே எதிர்மறையைக் கொடுக்கக்கூடியது. கூட்டினால் 9 வருவது என்பது ஒருவகையில் சாதகம்.

காங்கிரஸ் தலைமையினுடைய ஜாதகம் சரியில்லாததால் தனிப்பட்ட முறையில் நல்ல தசா புத்தி உள்ள வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி காண முடியும். மற்றவர்கள் தோல்வியைச் சந்திக்க நேரிடும்.

Share this Story:

Follow Webdunia tamil