Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏப்ரல் 13 வாக்குப் பதிவு: யாருக்குச் சாதகம்?

Advertiesment
தமிழக தேர்தல்
, சனி, 12 மார்ச் 2011 (18:17 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: ஏப்ரல் 13ஆம் தேதி தமிழக தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. மே 13ஆம் தேதிதான் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த இரண்டு தேதிகளையும் வைத்துப் பார்க்கும்போது தேர்தல் முடிவு யாருக்குச் சாதமாகவும், யாருக்கு பாதகமாகவும் அமையும்?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: இந்த தேதிகளை வைத்துப் பார்ககும் போது ஆட்சியில் இருப்பவர்களுக்கு மீண்டும் ஆட்சியை தக்கவைப்பதில் கொஞ்சம் சவால்கள் இருக்கும்.

சவால்கள் என்றால் பின்னடைவு என்று வைத்துக் கொள்ளலாமா?

ஆமாம், பின்னடைவு என்றும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் எதிர்த்து போட்டியிடுபவர்களுக்கு இது சாதகமான பலனைக் கொடுக்கும். ஏனென்றால் இராகு அப்படித்தான். அது இருக்கிற இடத்தில் சிக்கல்களைக் கொடுக்கும். அந்த மாதிரியான கிரகம் அது. மற்றொன்று இராகு என்பது பெண் ஆதிக்க கிரகம். அதிலும் தனித்து இயங்கக் கூடிய பெண்கள் இருக்கிறார்களே, அவர்களுக்கு உரிய கிரகம் இராகு.

குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்களுக்கு சுக்ரன். இராகு என்பது தனித்துப் செயல்படுகிறவர்களுக்கு, குடும்ப பந்தம், சொந்த பந்தம் எதுவும் இல்லாமல் நின்றுப் போராடுகிறார்களே அவர்களுக்கு உரியது. விதவைப் பெண்கள், விவாகரத்துப் பெற்றவர்கள், ஊனமுற்ற பெண்கள், வாழ்க்கையை சமூகத்திற்காக அர்ப்பணிக்கிற கன்னியாஸ்திரிகள், பொது வாழ்க்கையில் அரசியல் போன்றவற்றில் இருக்கக் கூடியவர்களுக்கெல்லாம் உரிய கிரகம் இராகு. அந்த இராகுவினுடைய ஆதிக்கத்தில் தேர்தல் நடப்பதால் இந்த தேர்தலில் முன்பைவிட வாக்குப் பதிவு அதிகமாக இருக்கும். பெண்களுக்கு ஆதரவாகவும் போய் முடியும். பல மாநிலங்களில் பெண்கள் ஆதிக்கத்தில் அதிக இடங்கள் கைப்பற்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, பெண்களுக்கு ஆதரவாகவே முஸ்லீம்கள் வாக்குகளும் சேரும்.

அப்படியென்றால் தமிழ்நாட்டில் ஜெயலலிதாவிற்கு சாதகமாக இருக்குமா? தலைவர் கேது ஆதிக்கமாச்சே?

கேதுவாக இருந்தாலும் இராகுவைத்தான் (சோனியா) பின்பற்றுகிறார். இருந்தாலும் இவரைவிட அவர்களுக்குதான் நல்லது செய்யும்.

பணத்தினுடைய ஆதிக்கம் இந்தத் தேர்தலில் எப்படி இருக்கும்?

தேர்தல் நட்சத்திரத்தை வைத்துப் பார்க்கும்போது ஆயில்யம் என்பதால் பணத்தின் ஆதிக்கம் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். குறிப்பாக அந்த நட்சத்திரத்தை அன்றைக்கு வைத்து கணக்கெடுக்கும் போதுதான். அதற்கு முன்னதாகவே பட்டுவாடா செய்வதெல்லாம் இந்தக் கணக்கில் வராது.

ஏனென்றால் இராகு கொஞ்சம் சந்து சிந்து வேலைகளையெல்லாம் செய்யக் கூடியவர்தான். சித்து வேலைகள் என்று சொல்வார்களே அந்த மாதிரியான கிரகம்தான். எனவே பண விளையாட்டுகள் உண்டு. அன்றைய தினத்தில் பிரச்சனைகள், கலகங்கள், கைகலப்பு, கத்திக்குத்து எல்லாம் நிகழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. வாக்குப் பதிவின் போது கோஷ்டி மோதல்கள் போன்றெல்லாம் நிகழ வாய்ப்பு இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil