Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கை படுகொலை பற்றி ஜோதிட ரீதியாக ஏன் யாரும் முன்கூட்டியே அறிவிக்கவில்லை?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

Advertiesment
இலங்கை
, வெள்ளி, 12 ஜூன் 2009 (18:19 IST)
ஒரு அசம்பாவிதம், பேரழிவு ஏற்படுவதற்கு முன்பாகவே அதுபற்றி ஞானிகள் அறிவித்துள்ளதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகிறது.

உதாரணமாக கோவலனும், கண்ணகியும் மதுரைக்குச் செல்லும் போது அதே படகில் சென்றதாகக் கூறப்படும் கவுந்தியடிகள், “தென்திசைக்கு போகாதீர்கள்; அங்கிருந்து வரும் குறிகள் சரியாகப் படவில்லை. வேறு எங்காவது சென்று பிழைத்துக் கொள்ளுங்கள” என்று கூறியதாகவும், அதற்கு கோவலன் மறுத்துப் பேசியவுடன், “விதி வழி மதி செல்லும்; யாரால் தடுக்க முடியும” என்று கவுந்தியடிகள் கூறுவதாகவும் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இலங்கையில் நிகழ்ப்போகும் படுகொலை பற்றி ஜோதிட ரீதியாக யாருமே முன்கூட்டியே அறிவிக்கவில்லை. இது ஏன்?

பதில்: இலங்கைப் படுகொலை மட்டுமல்ல, பெரும்பாலான விடயங்களை பற்றி முன்கூட்டியே ஜோதிட ரீதியாக அறிவிக்க முடியும். இதில் சிக்கல் என்னவென்றால் அதற்குத் தேவையான தரவுகள் (தகவல்கள்) கிடைப்பதில்லை. மிகத் துல்லியமான, நம்பகத்தன்மையுள்ள ஜாதகத் தகவல்களே எங்களுக்குத் தேவை.

உதாரணமாக நாட்டிற்கு உரிய கிரகம், நாட்டை ஆள்பவர்களுடைய ராசி, அவரை எதிர்க்கும் தலைவரின் ராசி ஆகியவை மட்டுமே நமக்கு தெரிகிறது. ஆனால் அவர்களின் லக்னம் பற்றி தகவல் இல்லை.

இதுபோன்ற தகவல்கள் இருந்தால் எதிர்காலத்தில் நிகழப்போகும் அசம்பாவிதங்கள், பேரழிகள், படுகொலைகள் பற்றி ஆணித்தரமாகவும், துல்லியமாகவும் கூற முடியும்.

Share this Story:

Follow Webdunia tamil