தமிழ்.வெப்துனியா.காம்: 2ஜி அலைக்கற்றை ஊழல் தாக்கம் வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: ஸ்பெக்ட்ரம், 2ஜி அலைக்கற்றை என்பது கம்யூனிகேஷன் துறைக்கு உரியது. இந்த கம்யூனிகேஷன் புதன் கிரகத்திற்குரியது. புதன்தான் மீடியா, மீடியம், ஊடகங்கள் இதற்கெல்லாம் உரியது.
அதாவது போஸ்ட்மேன், தூது போகக் கூடிய கிரகம் புதன். அதேபோல தூது போகக்கூடிய கருவிகள் செல்·போன், தொலைபேசி, கடிதங்கள், மின்னஞ்சல் இதற்கெல்லாம் உரிய கிரகமும் புதன்தான்.
அதனால் புதனுடைய தாக்கம் நிச்சயமாக இருக்கும். இல்லாமல் இருக்காது. வரப்போகும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 2ஜி தாக்கம் ஜோதிடப்படி நிச்சயம் உண்டு. முடிவுகளை நிர்ணயிக்கக் கூடிய அளவில் கூட அது இருக்கும்.