Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பூமியின் மீது வெள்ளி/செவ்வாய் மோதும் நிகழ்வு சாத்தியமா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

பூமியின் மீது வெள்ளி/செவ்வாய் மோதும் நிகழ்வு சாத்தியமா?
சமீபத்தில் வெளியாகியிருந்த செய்தியில் பூமியும், வெள்ளி அல்லது செவ்வாயும் சில நூறு ஆண்டுகளில் மோதிக் கொள்ளும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் அனுமானித்துள்ளனர். இப்படிப்பட்ட நிகழ்வுக்கான அறிகுறி ஏதேனும் ஜோதிட ரீதியாக தெரிகிறதா?

பதில்: ஜோதிட ரீதியாகப் பார்க்கும் போது கடந்த 100 நாட்களாக வெள்ளி வக்கிர நிலையில்தான் (மீனத்தில்) இருந்து வருகிறது. இதுமட்டுமின்றி கடந்த சில காலமாகவே வெள்ளி கிரகம் அடிக்கடி வக்ர நிலைக்கு செல்கிறது. இது ஜோதிட ரீதியாக சிறப்பானதாக கருதப்படவில்லை.

இதுமட்டுமின்றி வரும் அக்டோபர் முதல் படுவக்ர கதிக்கு செவ்வாய் செல்லப்போகிறது. அடுத்தாண்டு மே மாதம் வரை அது நீச்ச கதியிலேயே இருக்கப் போகிறது. அந்த வகையில் செவ்வாய், வெள்ளி ஆகிய 2 கிரகங்களுமே இயல்பு நிலையில் இருந்து மாறுபடும் வகையிலேயே கடந்த சில காலமாக இருந்து வருகின்றன. எதிர்காலத்திலும் இதுபோன்ற நிலையே காணப்படுகிறது.

ஜோதிடத்தில் ராஜகிரக அந்தஸ்து பெற்ற குருவின் நிலையும் தற்போது சிறப்பாக காணப்படவில்லை. ஒரு வீட்டில்/ராசியில் ஒரு ஆண்டுக்கு நிலைத்திருக்க வேண்டிய குரு தற்போது அதிசாரத்தில் பயணிப்பதால் குறுகிய காலத்திலேயே வேறு வீட்டிற்கு சென்று விடுகிறார்.

வரும் டிசம்பர் 15ஆம் தேதி கும்பத்திற்கு பெயர்ச்சியாகும் குரு, தொடர்ந்து ஒரு ஆண்டுக்கு அதே ராசியில் இருக்க வேண்டும். ஆனால் 2010 மே மாதத்திலேயே மீனத்திற்கு அதிசாரத்தில் செல்ல உள்ளார்.

எனவே, சுக்கிரன் (வெள்ளி), செவ்வாய், குரு ஆகிய 3 கிரகங்களுமே பலவீனமாகவே இருந்து வருகிறது. இதனால் எதிர்காலத்தில் கிரகங்களுக்கு இடையே மோதல் ஏற்படவும், அதன் காரணமாக ஒரு இனம் அழிந்து, புதிய இனம் உருவாவதும் சாத்தியமாகலாம். மனிதனின் வாழ்க்கை நிலை மாறுபடவும் வாய்ப்புள்ளது.

செவ்வாய், சுக்கிரனின் பாதகமான நிலை காரணமாக மனிதர்களின் திருமண வாழ்வில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். நிலத்தின் விலை ஒரு பகுதியில் விண்ணை நோக்கி உயர்ந்தாலும், மற்ற பகுதியில் கடும் வீழ்ச்சியடையும். இரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் புதிதாக உருவாகவும் வாய்ப்புள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil