Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அனைவரு‌க்கு‌ம் எ‌ந்த வ‌ழிபாடு முத‌ன்மையானது?

அனைவரு‌க்கு‌ம் எ‌ந்த வ‌ழிபாடு முத‌ன்மையானது?
, திங்கள், 28 மார்ச் 2011 (18:04 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌‌ம்: கிறித்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று சர்ச்சுக்கு போகிறார்கள். இஸ்லாமியர் வீட்டிலேயே தொழுகையில் ஈடுபடுகிறார் அல்லது வெள்ளியன்று மசூதிக்குப் போகிறார். மற்றபடி தமிழ்நாட்டு இதர மக்கள் தெய்வங்களை வழிபடுகிறார்கள். ஆனால் கோயில்களுக்குச் செல்பவர்கள் என்று பார்த்தீர்களென்றால் குறைவாகத்தான் இருக்கிறது. அதனால் பக்தி இல்லை என்று சொல்ல முடியாது. நேரமின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களாக இருக்கிறது. ஆனாலும், பொதுவாக ஏதாவது ஒரு கோயிலிற்குச் செல்ல வேண்டுமா?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: பொதுவாக இறைவழிபாடு நல்லது. முதன்மை வழிபாடு குலதெய்வம். தினசரி நினைத்துக் கொள்வது என்பது நல்லது. ஏனென்றால் பலருக்கும் குல தெய்வம் காடு, மலை, வயல்வெளி, சாலை வசதி இல்லாத இடங்களில்தான் இருக்கிறது. அதனால் எப்போதும் சென்றுவர முடியாது. ஆனால் குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். வருடம்தோறும் இரண்டு முறையாவது அவரவர்களுடைய குலதெய்வக் கோயிலிற்குச் சென்று வருவது நல்லது.

இதுதவிர, தசா புத்திகளை அடிப்படையாக வைத்து இந்த திசையில் இந்த தெய்வங்களை வழிபட்டால் நல்லது என்று சொல்கிறோம். உதாரணத்திற்கு, செவ்வாய் திசை, குரு திசை நடக்கும் போது முருகரை விடாமல் வழிபடுங்கள். கந்த சஷ்டி கவசத்தைப் படியுங்கள் என்று சொல்கிறோம். இதில் முதன்மை வழிபாடாக மூலவர், முதல்வர் விநாயகருக்கு கொடுப்போம்.

கிறித்தவர்களில் கத்தோலிக்கர்கள், பெந்தகொஸ்தே என்று பல பிரிவுகள் இருக்கிறது. அவர்களும் பல இறை தூதர்களை வணங்குகிறார்கள். அங்கேயும் பல அவதாரங்கள் வருகிறது. அதனால் தசா புத்திக்கு தகுந்த மாதிரி வழிபடுவது என்பது நல்லது.

இஷ்ட தெய்வம், குல தெய்வம், தசா புத்தி தெய்வம் என்று பல தெய்ங்கள் உண்டு. சிலரிடம், நீங்கள் சிவ வழிபாடுதான் செய்ய வேண்டும் என்று சொல்வோம். அதற்கு அவர்கள், நீங்க என்னதால் சொன்னாலும் திருப்பதிக்கு போகாமல் இருக்க முடியாது. மாதத்திற்கு ஒரு முறையாவது திருப்பதிக்கு போய் வருவேன் என்று சொல்வார்கள். ஆகையால், இஷ்ட தெய்வம் என்று ஒன்று வருகிறது. அவர்கள் இஷ்ட தெய்வங்களை நினைத்துக் கொள்ளலாம். ஏனென்றால், சிலருக்கு அவர்களுக்கு பிடித்த இடங்களுக்குச் சென்றால் திருப்தி உண்டாகும். இதுபோல அவர்களையும் மீறி ஒரு சக்தி அவர்களுக்கு நிம்மதியைத் தருவதாக உணர்வார்கள். அதன்படி வணங்கிக் கொள்ள வேண்டியதுதான்.

Share this Story:

Follow Webdunia tamil