Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌பி‌த்ரு‌க்களு‌க்கு தொட‌ர்‌ந்து ‌தி‌தி கொடு‌ப்பது அவ‌சியமா?

‌பி‌த்ரு‌க்களு‌க்கு தொட‌ர்‌ந்து ‌தி‌தி கொடு‌ப்பது அவ‌சியமா?
, சனி, 4 செப்டம்பர் 2010 (16:00 IST)
தமிழ்.வெப்துனியா.காம்: பித்ருக்களுக்கு திதி கொடுத்தல் என்பது நமது நாட்டில் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. என்றைக்கோ இறந்தவர்களுக்கு இன்றைக்கும் திதியா என்ற கேள்வி பகுத்தறிவு மட்டத்தில் மட்டுமல்ல, சாமி கும்பிடுபவர்களுக்கும் ஏற்படுகிறது. இறந்த எவர் ஒருவரின் ஆத்மனும் அடுத்த 3 ஆண்டுகளில் பிறப்பு எய்திவிடுகிறது என்ற ஆழமான ஆன்மிக ஞானமும் இந்த நாட்டில் இருக்கிறது. ஸ்ரீ அரவிந்தர் இதனை சொல்லியிருக்கிறார். அப்படியிருக்கும் போது பித்ருக்களுக்கு திதி கொடுப்பது என்பது எத்தனை ஆண்டுகளுக்குச் செய்யலாம் ஏன்?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: பித்ருக்களுக்கு திதி கொடுப்பது என்பது மிக மிக முக்கியமான விடயம் என்று வேதங்கள் சொல்கின்றன. வேதங்கள் சொல்வது ஒருபக்கம் இருக்கட்டும். சாதாரணமாக யோசிப்போம். நம்மை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள். பிறகு நமக்கு ஒரு பாதையை தெரிந்தோ, தெரியாமலோ அமைத்துத் தந்தவர்கள். இன்றைக்கும் பலர் பாட்டன் சொத்துக்களில் வாழக்கூடியவர்களை பார்க்கிறோம். அவர் மட்டும் அப்ப கஷ்டப்பட்டு கடையை ஆரம்பிக்காமல் போயிருந்தால் இவர் இன்றைக்கு காலாட்டிக்கிட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியாது என்று சொல்லக்கூடிய விஷயங்களெல்லாம் இதில் வருகிறது. அதனால்தான் பித்ருக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத் திதி கொடுக்கிறோம்.

பொதுவாக பித்ருக்களுக்கு திதி கொடுப்பது அமாவாசை அன்று. வானவியல் படி அமாவாசை அன்று சூரியனும், சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் வருகிறது. சூரியனை பிதுர்காரகன், சந்திரனை மாதுக்காரகன் என்று சொல்கிறோம். பிதுர் என்றால் பிதா, மாது என்றால் மாதா. இதேபோல சூரியனை ஆத்மக்காரகன் என்றும், சந்திரனை மனோக்காரகன் என்றும் சொல்கிறோம். ஆத்மாவும், மனதும், இந்த இரண்டிற்கும் உரிய கிரங்கங்கள் ஒன்று சேரக்கூடிய நாட்களில் முன்னோர்களை நினைத்து வழிபடும் போது நமக்கு ஒருவித சக்தி கிடைக்கும். முடித்துவிட்டு வந்தார் திடீரென்று முடிவெடுத்துவிட்டார் என்று சொல்வார்கள். இதெல்லாம் நம் மனதை ஒருமுகப்படுத்துவதற்கான வழிமுறைகள்.

நல்ல முன்னுதாரணமாக இருந்த பாட்டன், பாட்டியை நினைத்து உட்கார்ந்து பிதுர்க்கு வேண்டிய கர்மாவெல்லாம் செய்யும் போது, அவர்களுக்குள் ஒரு இன்டீயூஷன் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. குழப்பத்தில் இருந்தால் தெளிவு பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஒரு தற்காலிக ரிலீஃப் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் கருமாதி போன்றதையெல்லாம் பெரும்பாலும் நதியோரமாக செய்வார்கள். அந்த நதியில் நீராடும் போதும் எனர்ஜி கிடைக்கும். அதனால் இதெல்லாம் ஒரு சாதகமான செயல்கள்தான். அதனை தவிர்க்க வேண்டிய தேவையில்லை. ஆனால், அதற்காக ஆடம்பரமாக செய்யக்கூடியது. நன்றிக்காக அவர்களை நினைத்துச் செய்ய வேண்டியது. அந்த நினைவுகளில் 10 நிமிடமோ, 15 நிமிடமோ இருப்பது. அவர்கள் சொன்ன நல்ல விஷயங்களைச் செயல்படுத்துவதற்கு முயற்சிப்பது. இதற்கெல்லாம் அது உதவிகரமாக இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil