Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌திடீ‌ர் நோ‌ய்‌க்கு எ‌ன்ன காரண‌ம்?

‌திடீ‌ர் நோ‌ய்‌க்கு எ‌ன்ன காரண‌ம்?
, சனி, 19 மார்ச் 2011 (17:35 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌‌னியா.கா‌ம்: திடீரென்று சிலர் நோய்வாய் படுகிறார்கள். இதுவரைக்கும் ஒன்றுமில்லாமல்தான் இருந்தது, திடீரென்று வந்துவிட்டது என்றெல்லாம் சொல்கிறார்களே இதற்கு கிரக அமைப்புகள் காரணமா? இதனை எப்படி முன்னறிவது?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: திடீர் நோய்வாய்ப்படுவது என்பதற்கு ஒரு காம்பினேஷன் இருக்கிறது. ஒருவருடைய ஜாதகத்தில் ஒரே வீட்டில், 7வது, 8வது, 2வது வீடோ ஏதோ ஒரு வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாவ கிரகங்கள் இருந்தால் திடீர் நோய்வாய்ப் படுதல், திடீர் இறப்பு போன்றெல்லாம் ஏற்படும்.

குறிப்பாக பார்க்கும் போது சனி செவ்வாய் இராகு, சனி செவ்வாய் கேது போன்ற காம்பினேஷனில் உள்ளவர்கள் திடீரென்று பாதிக்கப்படுகிறார்கள். ஒரே வாரத்தில் எல்லாமே முடிந்துவிட்டது என்று சொல்வார்களே அந்த மாதிரி ஏற்படும்.

இதுபோல இரண்டு மூன்று பாவ கிரகங்கள் இருக்கிறவர்கள், குறிப்பிட்ட தசா புத்தி வரும் போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.

சனி செவ்வாய் இராகு, சனி செவ்வாய் கேது, சந்திரன் இராகு, சந்திரன் சனி இராகு, சந்திரன் சனி கேது போன்ற காம்பினேஷனில் உள்ளவர்களெல்லாம் உஷாராகவே இருக்க வேண்டும். தங்களுடைய உடம்பை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இதுமட்டுமில்லாமல், குறிப்பிட்ட தசா புத்தி வரும்போது பயணம், வெளி உணவு தவிர்த்தல் போன்று உஷாராக இருந்தால் நன்றாக இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil