Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேலை‌யி‌ல் ‌திடீரெ‌ன்று ‌சீ‌ர்‌மிகு ‌நிலை ‌‌பிறழ‌க் காரண‌ம் எ‌ன்ன?

Advertiesment
வேலை‌யி‌ல் ‌திடீரெ‌ன்று ‌சீ‌ர்‌மிகு ‌நிலை ‌‌பிறழ‌க் காரண‌ம் எ‌ன்ன?
, வெள்ளி, 25 மார்ச் 2011 (19:09 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: வேலை செய்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று பைத்தியம் பிடிப்பது போன்று ஒரு உணர்வு ஏற்படுகிறது. சலிப்பு எல்லாம் இல்லை, சீர்மிகு நிலை என்று சொல்வோமே கொஞ்சம் பிறழ்கிறது. அது எதனால் ஏற்படுகிறது?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: செய்து கொண்டிருக்கும் வேலை என்னவென்று பார்க்க வேண்டும். ஏனென்றால் செய்யும் வேலையே தசா புத்திக்கு தகுந்த மாதிரிதான். ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு துறைக்கு உரியதாகிறது.

வங்கியில் வேலை செய்கிறார்கள். திடீரென்று பார்த்தால் வி.ஆர்.எஸ். கொடுக்கிறார்கள். குருதான் காசு, பணம், வங்கிக்கெல்லாம் உரிய கிரகம். காசோலை என்று வரும்போது அது சனியாகிறது. அப்படி ஒவ்வொன்றிற்கும் ஒரு கிரகம் இருக்கிறது.

நீங்கள் ஒரு வேலையில், தொழிலில், வியாபாரத்தில் இருக்கிறீர்கள். உங்களுக்கு மாறுபாடான திசை வருகிறது என்று வைத்துக்கொண்டால், அதாவது நீங்கள் இருக்கும் துறைக்கு, தொழிலிற்கு எதிரான திசை வருகிறதென்றால் அது உங்களுக்கு ஒருவிதமான இயலாமை, ஆற்றாமை, சலிப்பு வரக்கூடும். அப்பொழுதுதான் நாங்கள் என்ன சொல்கிறோமென்றால், துறையை மாற்றுங்கள், வேறு துறைக்குச் செல்லுங்கள், இதில் இருந்தால் வீண் பழி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

மென்பொருள் துறையில் வேலை செய்பவர் ஒருவர் வந்திருந்தார். இந்தத் துறையையே விட்டுவிட்டு எம்.பி.ஏ. படித்து ஹெச்.ஆர். ஆக வரப்பாருங்கள் என்று சொல்லி அனுப்பினோம். தற்பொழுது அவர் எம்.பி.ஏ. முடித்து ஹெச்.ஆர். ஆக இருக்கிறார். மைண்ட் ·பீரியாக இருக்கிறது சார், மென்பொருள் துறையில் இருக்கும் மற்ற இடையூறுகள் கூட இல்லாமல் போய்விட்டது என்று கூறினார். குடும்பத்துடன், மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மனைவியும் என்னைப் பூரணமாக நம்புகிறார் என்று சொன்னார்.

எனவே, இது வேலையைப் பொறுத்ததுதான்.

Share this Story:

Follow Webdunia tamil