ஜோதிட ரத்னா க.ப.வித்யாதரன்: விஜயகாந்த் தனித்துப் போட்டியிட்டால் நிறைய பாதிப்புகள் உண்டாகும். ஏனென்றால் தற்பொழுது அவருக்கு ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கிறது. குருவும் 6வது வீட்டில் இருக்கிறார்.
இப்படிப்பட்ட நிலையில் அவர் தனித்துப் போட்டியிட்டால் அந்தக் கட்சி சிதைவதற்கே வாய்ப்பு இருக்கிறது. கட்சியின் முக்கியப் பிரமுகர்களெல்லாம் அணி மாறுவது, வேறு கட்சிகளுக்குத் தாவுவது போன்று பெருத்த பாதிப்புகளையெல்லாம் அவர் சந்திக்க நேரிடும்.