Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாத்தாவின் பெயரை முதல் எழுத்தாக சேர்ப்பது ஏன்?

Advertiesment
தாத்தாவின் பெயரை முதல் எழுத்தாக சேர்ப்பது ஏன்?
, திங்கள், 3 அக்டோபர் 2011 (13:19 IST)
FILE
தமிழ்.வெப்துனியா.காம்: ஒருவருடைய பெயரில் தந்தையின் முதல் எழுத்துடன் தாத்தனின் முதல் எழுத்தும் சேர்க்க வேண்டும் என்று எந்த அடிப்படையில் பரிந்துரைக்கிறீர்கள்?

ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்: சாதாரணமாக எண் ஜோதிடம் பார்ப்பவர்கள் ஏதாவது ஒரு எழுத்தை சேர்த்துக்கொண்டு அல்லது ஊர் பெயரையே சேர்த்து அவர்கள் எதிர்பார்க்கும் எண் வந்தவுடன் விட்டுவிடுகிறார்கள். ஆனால் நம்முடையது அப்படி கிடையாது. ஜாதகத்தைப் பார்த்துவிட்டு எந்த கிரகம் வலுவாக இருக்கிறதோ அந்த அடிப்படையில்தான் எழுத்துக்களை இணைக்கிறோம். மாதுர் பாட்டன் என்பது இராகு, பிதுர் பாட்டன் என்பது கேது. ஆனால் சில நூல்கள் மாற்றியும் சொல்கின்றன. இராகு என்பது தந்தை வழி பாட்டனுக்குரியது, கேது என்பது தாய் வழி பாட்டன் என்றும் சொல்லப்படுகிறது.

இராகுவோ, கேதுவோ ஒருவருடைய ஜாதகத்தில் நன்றாக இருந்தால்தான் பாட்டானாருடைய பெயரின் முதல் எழுத்தையோ, பாட்டியினுடைய பெயரின் முதல் எழுத்தையோ பயன்படுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால் பயன்படுத்தவே கூடாது. அப்பாவினுடைய பெயரை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. ஏனென்றால் அது அடையாளம் காட்டக்கூடியது என்பதால் அதனை தவிர்க்க முடியாது. அதற்பிறகு வரும் எழுத்துக்களையெல்லாம் கிரகங்களைப் பார்த்துதான் முடிவெடுக்க வேண்டும். இராகுவோ, கேதுவோ நன்றாக இருந்தால்தான் மாதா பாட்டனையோ, பிதா பாட்டனையோ எடுத்துக்கொள்ள வேண்டும்.

செவ்வாய் என்பது பூமிக்காரகன். இந்த செவ்வாய் ஒருத்தருடைய ஜாதகத்தில் யோகாதிபதியாக இருந்து, அந்த செவ்வாய் நன்றாக இருந்தால்தான் ஊர் பேரைக்கூட சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல் நாமாகவே ஊர் பெயரைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது. சிலரெல்லாம் சேர்த்துக் கொள்கிறார்கள். நெல்லை, விருதை என்றெல்லாம், அப்படி சேர்க்கக்கூடாது. இதுபோன்று சேர்த்துக்கொண்ட சிலருடைய ஜாதகத்தைக் கூட பார்த்திருக்கிறோம்.

விருதுநகரைச் சேர்ந்த நண்பர் ஒருவர் அவர் பெயரின் முன்பாக விருதை என்று சேர்த்திருந்தார். அவருடைய பூர்வ புண்ணியஸ்தானம் கெட்டுக் கிடக்கிறது. செவ்வாயும் கெட்டுக் கிடக்கிறது. அப்படி இருக்கும் நிலையில் ஏன் ஊர் பெயரைச் சேர்த்திருக்கிறீர்கள். வேண்டாம் எடுத்துவிடுங்கள் என்று சொன்னேன். அதற்கு அவர், எனக்கு அடையாம் காண்பிப்பதே இந்த விருதைதான் என்றார். அதற்கு நான் சொன்னேன், இந்த விருதை விடுங்கள், பிறகுதான் வெற்றியடைவீர்கள் என்றேன். அவரும் அதனை மாற்றிவிட்டு கொஞ்ச காலம் கழித்து வந்தார். வந்தவர், அதனை மாற்றிய பிறகுதான் ஒரு வீடு வாங்கியிருக்கிறேன் என்றார். அதற்கு முன்பு பெயர், புகழ் எல்லாம் இருந்தது. ஆனால், இப்பொழுதுதான் எனக்கென்று சொத்து வாங்கக்கூடிய அமைப்பு கிடைத்து இருக்கிறது என்றார். அதனால், பார்த்து சேர்க்கும் போதுதான் அது சிறப்பாக இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil