அலுவலகத்தின் முகப்புப் பகுதி இருட்டாக இருந்தால் பாதிப்பு ஏற்படுமா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:
எந்த ஒரு இடத்திற்கும் (அலுவலகம், வீடு, கடை) முகப்புப் பகுதி வெளிச்சமாக இருப்பது நல்லது. இயற்கையான வெளிச்சம் போதவில்லை என்றால் செயற்கையாக வெளிச்சத்தை ஏற்படுத்திக் கொள்வது சிறந்தது.
ஆனால் ராகு, கேது ஆதிக்கத்தில் உள்ளவர்களுக்கு முகப்புப் பகுதி இருட்டாக உள்ளது போன்ற வீடுகள், அலுவலகங்கள அமையும். உதாரணமாக, சம்பந்தப்பட்ட ஜாதகர் (ராகு/கேது ஆதிக்கமுள்ளவர்) வீடு கட்டிய பின்னர் அவரது அண்டை நிலத்துக்காரர் கட்டும் வீடுகளால் வெளிச்சம் மறைக்கப்படும்.
இதேபோல் லக்னத்தில் சனி இருந்தாலும், 4ஆம் இடத்தில் (கட்டிட ஸ்தானம்) சனி இருந்தாலும் இதுபோன்று ஏற்படும். ஆனால் வீட்டில் உள் அறைகள், இதர பகுதிகள் சிறப்பாக இருக்கும். அதனால் எந்த பாதிப்பும் இல்லை.
சனி, ராகு/கேதுவின் ஆதிக்கத்தில் இல்லாதவர்கள் முகப்பு பகுதி இருட்டாக இருக்கும் வீடுகளில் தங்குவது கூடாது. அப்படி அமையும் பட்சத்தில் வேறு வீடு, அலுவலகம் மாற்றிக் கொள்வது பலனளிக்கும்.