Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌‌பிரதோஷ‌த்தை யா‌ர் யா‌ர் கடை‌பிடி‌க்க வே‌ண்டு‌ம்?

‌‌பிரதோஷ‌த்தை யா‌ர் யா‌ர் கடை‌பிடி‌க்க வே‌ண்டு‌ம்?
, சனி, 30 ஜூலை 2011 (21:00 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: பிரதோஷ நாளின் சிறப்பினையும், அதனை யார் யார் எப்பொழுது கடைபிடிக்க வேண்டும் என்பதனையும் கூறுங்கள். ஏனென்றால், பிரதோஷத்தைப் பொறுத்தவரையில் முக்கியமாக யார் யார் கடைபிடிக்க வேண்டும் என்பது தெரிந்தால் அது அவர்களுக்கு வழிகாட்டுதலாக இருக்கும்.

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். சர்ப தோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும். சிவனை தேவர்கள், மூவர்கள் வழிபடுவது ஒரு காலம். அதேபோல, மனிதர்கள் சிவனை வழிபடுவதற்கான காலம்தான் பிரதோஷம். அதில் தேய்பிறை பிரதோஷம் மனிதர்களுக்கு உள்ளது. வளர்பிறை பிரதோஷம் தேவர்களுக்கு உள்ளது.

தேய்பிறை பிரதோஷங்கள் எல்லாமே விசேஷமானது. பெளர்ணமிக்கு பிறகு வரக்கூடிய சதுர்த்தி திதியை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். அதேபோல தேய்பிறையில் வரும் சஷ்டியிலும் விரதம் இருக்கிறோம். தேய்பிறையில் வரக்கூடிய திரியோதசி திதியைத்தான் பிரதோஷ நாள் என்கிறோம். இந்த நாள் எப்பொழுதும் மனிதர்களுக்காக உள்ளது. அதனால் அது விசேஷமானது.

மற்ற நாட்களில் சிவன் மட்டும் காட்சி கொடுப்பார் வணங்கலாம். பிரதோஷ நாளில், பிரதோஷ நேரமான மாலை 4 முதல் 6 வரை நந்தி பகவானையும் சேர்த்து வணங்கலாம். நந்தி பகவான் அன்றைய தினத்தில் தனது தவத்தை துறந்துவிட்டு மக்களுக்காக எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். அதனால்தான் பிரதோஷம் அன்று சிலர் நந்தியினுடைய காதில் எதாவது ரகசியத்தைச் சொல்வார்கள்.

சைவத்தைப் பொறுத்தவரையில் பிரதோஷம் என்பது பிரதானமான விரதம். அன்றைக்கு எல்லா வேளைகளையும் உணவை தவிர்த்துவிட்டு பிரதோஷத்தை முடித்துவிட்டு மாலை 6 மணிக்கு மேல் உணவு உட்கொள்கிறவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அது ஒரு அற்புதமான நாள். பொதுவாக பிரதோஷம் அன்று விரதம் இருப்பதால் நமது உடம்பும் நலம் பெறும். ஏனென்றால் சந்திரன் சூரியனை நோக்கி பயணிக்கக்கூடிய காலகட்டம் அது. குறிப்பிட்ட அந்த பிரயோதசி திதியில் விரதம் இருந்தால் வாயுக்கோளாறு, வயிற்றுக்கோளாறு எல்லாம் நீங்கும். அடுத்து, உடல் நிலை, மனநிலை எல்லாம் சீராகும். இதுபோன்ற சிறப்புகள் உண்டு.

பொதுவாக பிரதோஷம் அன்று கறந்த பசும்பால் கொடுத்து வழிபட்டால் நல்லது. ஏனென்றால் சிவன் அபிஷேகப் பிரியன். அதனால் கறந்த பசும்பால் கொடுக்கலாம். இல்லையென்றால் இளநீர் வாங்கித் தரலாம். ஏனென்றால் சிவனை அபிஷேகப் பொருளாலும், அர்ச்சனைப் பொருளாலும் வணங்க வேண்டும். இறைவன் எப்பொழுதுமே இயற்கையை விரும்பக்கூடியவன். இயற்கையான வில்வ இல்லை. அதற்கடுத்து பசும்பால். இது எல்லாவற்றையும் விட தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் கடைபிடித்தால் எல்லா வகைகளிலும் சிறப்பாக இருக்கும்.

பிரதோஷத்தில் ஏழு வகைகள் உள்ளது என்கிறார்களே...

அதெல்லாமும் உண்டு. சுக்ல பிரதோஷம், கிருஷ்ண பிரதோஷம், சனிப் பிரதோஷம் என்று ஒவ்வொரு வாரத்திற்கும் ஒவ்வொன்று உண்டு. ஞாயிறு அன்று ஆதிப் பிரதோஷம். திங்களன்று சோமவாரப் பிரதோஷம், மங்கள வாரப் பிரதோஷம், புதவாரப் பிரதோஷம், குருவாரப் பிரதோஷம், சுக்ர வாரப் பிரதோஷம் என்று இருக்கிறது. இது எல்லாவற்றிலும் சிறப்பு வாய்ந்தது சனிவாரத்தில் வரக்கூடிய பிரதோஷம். இந்த சனிப் பிரதோஷம்தான் எல்லா வகையிலும் சிறப்பு வாய்ந்தது. சனிதான் அதிகமான தோஷத்தையும், துன்பங்களையும் கொடுக்கக்கூடியவர் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். அந்த சனிக்கிழமையில் பிரதோஷம் வந்துவிட்டால், சனியால் ஏற்படக்கூடிய பெரிய பாதிப்புகள் எல்லாம் விலகி சாதகமாக வரும் என்று உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil