தமிழ்.வெப்துனியா.காம்: நவ கிரகங்களை ஒன்பது முறை சுற்றி வருகிறோம். இதேபோல, சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மரை இரட்டைப் படையில் சுற்றி வருகிறோம். உதாரணத்திற்கு, நவ கிரக தோஷம் இருக்கும் போது மட்டும் நவ கிரகங்களை ஒன்பது முறை சுற்றி வரவேண்டும். மற்றபடி அத்தனை முறை சுற்றி வரவேண்டிய அவசியம் இல்லை என்று சொல்கிறார்கள். இது எந்த அளவிற்கு உண்மை. இதை எப்படி சரியாக கடைபிடிப்பது?
ஜோதிட ரத்னா முனைர் க.ப.வித்யாதரன்: நவ கிரகங்களுக்கு சாதாரணமாக 9 கிரகங்களுக்கு ஒவ்வொரு முறை. ஆனால் ஒரு முறை சுற்றினாலே போதும்.
"ஓம் ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச குரு சுக்ர சனிப்யச்ச ராகவே கேதவே நமஹ" என்ற மந்திரத்தைச் சொல்லி ஒரு முறை வலம் வந்தாலே போதும்.
"ஓம் நவகிரக பரபிரம்மனே நமக" என்று கூட சொல்லலாம். இதையெல்லாம் சொல்லிக்கொண்டு ஒரு முறை வந்தாலே போதும். 9 முறை சுற்றுவதிலும் ஒன்றும் தவறு கிடையாது. ஆனால் ஒரு முறையாவது சுற்றிவிடுவது நல்லது. அடுத்து எந்தக் கோளுடைய பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு அந்தக் கோளுக்கான, அந்த கிரகத்திற்கான மந்திரங்கள், அதனிடம் விளக்கேற்றுதல் இதெல்லாம் மிகவும் நல்லது. அதையும் செய்யலாம்.
ஏனென்றால் ஒவ்வொரு கிரகத்தினுடைய தாக்கமும் பூமியில் இருந்துகொண்டே இருக்கிறது. பூமியில் வாழக்கூடிய ஒவ்வொரு உயிரினத்தின் மேலும், ஒவ்வொரு அணுவையும் அது தாக்குகிறது. அதை நினைவு கூர்ந்து வணங்கும்போது ஒரு தொடர்பு நமக்குக் கிடைக்கிறது. அதனுடைய வைப்ரேஷன் ஒரு பாஸிடிவ் எனர்ஜி. மெண்ட்டலி ஒரு ·பீரினஸ் இதெல்லாம் நமக்குக் கிடைக்கிறது.
சனீஸ்வரருக்கு சனிக்கிழமையானால் எள் விளக்கெல்லாம் நிறைய பேர் ஏற்றுகிறார்கள். சனி எண்ணெய் வித்துக்களுக்கு உரிய கிரகம். இதேபோல, ஏழரை சனி வரும் போது இரும்புச் சத்து குறையும். அதனால்தான் இரும்புக்கு அதிபதியாக சொல்கிறோம். இரும்புச் சத்து குறைபாடு என்று சொல்கிறோமே அதெல்லாம் குறைகிறது. ஏழரை சனி, அஷ்டம சனி, சனி தசை இதெல்லாம் நடக்கும்போது குறைகிறது. சாதாரணமாக எள் இரும்புச் சத்து அதிகம் என்று சொல்வார்கள். அப்ப எந்த அளவிற்கு தொடர்பு இருக்கிறது என்று பாருங்கள்.