ஒரே ராசி உடைய தம்பதிகளின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:
பொதுவாகவே தம்பதிகள் வெவ்வேறு ராசியாக இருப்பது நல்லது. ஏனென்றால் இருவருமே ஒரே ராசியாக இருக்கும்பட்சத்தில் கிரக நிலைகள் சரியில்லாத போது (ஏழரைச் சனி, அஷ்டமச் சனி) இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
இதேபோல் இருவருக்கும் ராகு/கேது தசை நடக்கும் போது ஈகோ பிரச்சனை ஏற்படும். எந்த ஒரு விடயத்தையும் கணவன் செய்யட்டுமே என்று மனைவியும், மனைவி செய்யட்டுமே என்று கணவரும் மெத்தனமாக இருந்து விடுவதால் பிரச்சனைகள் ஏற்படும்.
ஆனால் ஒரே ராசியாக இருந்தால் தம்பதிகளின் ரசனை ஒத்துப்போகும். எனினும் மோசமான கிரக நிலையின் போது இருவருக்கும் இடையே வாரத்தில் ஒருமுறையாவது கருத்து மோதல்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. இதனால் இருக்கும் இடையிலான பாசப்பிணைப்பு பாதிக்கப்படும்.
எனவே, ஒரே ராசியில் மற்றும் நட்சத்திரத்தில் உள்ள இருவரை சேர்த்து வைக்காமல் தவிர்ப்பது நல்லது. ஒரே ராசியாக இருந்தாலும் வேறு வேறு நட்சத்திரம் உடையவர்களாக இருப்பது ஓரளவு பிரச்சனையை குறைக்கும்.