Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2020 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - தனுசு

2020 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - தனுசு
, வியாழன், 26 டிசம்பர் 2019 (17:44 IST)
தனுசு: (மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்) - அதிகார தோரணையும், கம்பீரமான தோற்றமும் உடைய தனுசு ராசியினரே நீங்கள் எளிதாக பழகக் கூடியவர். இந்த ஆண்டு பணவரத்து திருப்தி தரும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். 

பயணங்களின் போதும் வாகனங்களை ஓட்டி செல்லும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதிய நபர்களின் அறிமுகம்  கிடைக்கும். அவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.
 
தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நிதானமாக நடந்து  கொள்வது வியாபாரம் நன்கு நடக்க உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும்.
 
ராசியில் சனி சஞ்சாரம் இருப்பதால் குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். உறவினர்களுடன் அனுசரித்து செல்வதும், வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது.  பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லது.
   
பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினர் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களிடையே இடைவெளி குறைய மனம் விட்டு பேசுவது நல்லது. உங்களது செயல்களில்  மற்றவர் குறை காண நேரலாம். 
 
அரசியல்துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும்.  பயணங்களின் போதும் வாகனங்களை ஓட்டி செல்லும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு சக மாணவர்களிடம்  அனுசரித்து செல்வது நல்லது. கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம். 
 
மூலம்:
 
இந்த ஆண்டு உங்கள் நிலைமை மாறும். நீங்கள் விரும்பியதை கேட்டு பெற்றுக் கொள்ளலாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை  கிடைக்கும். கன்சல்டன்சி துறைகளில் வேலை செய்பவர்கள் தகுந்த முன்னேற்றம் கிடைக்கும். பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிபவர்களும்  நற்பலன்கள் கிடைக்கப் பெறுவார்கள். பதவி உயர்வு கிடைக்கும்.
 
பூராடம்:
 
இந்த ஆண்டு அலைச்சல் இருக்கும். சிலர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்கள்  குழந்தைகளால் சிற்சில பிரச்சனைகள் வரலாம். அதற்காக உங்களின் குழந்தைகள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம்.  உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் வரும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ளுங்கள்.
 
உத்திராடம்:
 
இந்த ஆண்டு தம்பதிகளிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். திருமணமாகாமல் அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு திருமணம் இனிதே நடந்தேறும். புதிதாக  வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.    
 
பரிகாரம்: தேவாரம், திருவாசகம் படித்து சிவனை வணங்குவது நன்மையை தரும். தடைபட்ட காரியம் தடைநீங்கி நடக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2020 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - விருச்சிகம்