Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண்களின் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்களை விரட்டும் நித்திய கல்யாணி...!

Advertiesment
பெண்களின் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்களை விரட்டும் நித்திய கல்யாணி...!
நித்திய கல்யாணி தாவரத்தில் இரண்டு வகைகள் உள்ளதாக பெரிதும் அறியப்படுகின்றது. இத்தாவரவினம் ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். இதன் இலைகள் நீள்வட்ட வடிவமாகவும் மேல்பகுதி மிகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
மருத்துவ குணங்கள்: 
 
பல மருத்துவ குணங்கள் கொண்ட இதனை மலேசியர்கள் போகேக் "ரெம்புட் ஜலாங்" என்றும் "கெகுதிங் சினா" எனவும் பல்வேறு பெயர்களில்  அழைப்பர். பிலிப்பைன்ஸ் நாட்டில் இதனை சிட்சிரிக்கா எனவும், வியட்நாம் நாட்டில் ஹவா ஹாய் டாங் எனவும் அழைப்பர். பாரம்பரிய  மருத்துவத்தில் தன்னிகரற்ற நாடான சீனாவில் இதனை "ச்சாங் சுன் ஹூவா" என அழைப்பர். பட்டிப்பூ என அழைக்கப்படும் இந்த மூலிகைத் தாவரத்திற்கு சீன மருத்துவத்தில் மிகப்பெரிய இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 
 
இம்மலர் அழகுக்காகவும், தோட்டத்திற்காகவும் மட்டுமின்றி இதன் மகத்தான மருத்துவ குணங்களுக்காகவும் பெரிதும் பயிரிடப்படுகின்றது. மேலும் இது புற்று நோய்க்கான அருமருந்தாகும். இதன் மருத்துவத் தன்மை ஆஸ்துமா, குளிர் ஜுரம், இரத்தப் புற்றுநோய், நீரிழிவு நோய்,  உயர் இரத்த அழுத்தம், பெண்களின் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்களை விரட்டும்.
 
பெண்களுக்கு இந்த மூலிகை ஒரு வரம் என்றே கூறவேண்டும், பல பிரச்சினைகளை இது கண்கண்ட மருந்து. மார்பக புற்றுநோயை அடித்து  விரட்டும் அமுதம். அதுமட்டுமன்று, இது மூளை சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளையும், மன நோய்களையும் நீக்கும் அமிர்த மருந்தாகும்.
 
மார்பகப் புற்றுநோய்: 
 
பெண்களுக்கு உயிர்கொல்லி பிரச்சினையாக விளங்குவது மார்பகப்புற்று நோய். மார்பக திசுக்கள் மாற்றங்கண்டு கட்டிகளாக மாறி புற்றுநோயாக  உருவெடுக்கும். இந்த நோயானது இன்றைக்கு பெரும்பாலான பெண்களின் பிரச்சினையாக இருக்கின்றது. கட்டிகள் பெரிதாக உருவான  பின்னரே இவற்றை நம்மால் அடையாளங்காண முடிகின்றது. இவற்றிற்கு ஆங்கில மருத்துவத்தில் பல்வேறு கண்டறியும் முறைகள் உள்ளன.  இந்த வகை புற்றுநோயால் அவதிப்படுபவர்கள், நமது நித்தியகல்யாணியைக் கொண்டு நோயைக் கட்டுப்படுத்தலாம். முதலில் இதற்கு நித்தியகல்யாணி சூரணத்தை உபயோகிக்க வேண்டும். 
 
செய்முறை: 
 
நித்திய கல்யாணிச் செடியை வேருடன் பிடிங்கி நன்கு சுத்தம் செய்து உலர்த்த வேண்டும். அதில் இலை, பூ, தண்டு, வேர் என அத்தனையும்  இருக்கலாம். அந்தச் செடி முழுவதுமாக காய்ந்து பொடியாக அரைபடும் பதத்திற்கு வந்த பிறகு அதனை பொடி செய்து பத்திரப்படுத்தி  வைத்துக்கொள்ள வேண்டும். 
 
இந்த பொடியிலிருந்து ஆறு கிராம் முதல் பதினைந்து கிராம் வரை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை 400 மில்லி சுத்தமான நீரிலிட்டு  கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் 200 மில்லி லிட்டராக சுண்டும் வரை கொதிக்க வைத்து பின் ஆற வைக்க வேண்டும். 
 
இந்த குடிநீரை கஷாயம் என்று அழைக்கலாம் அல்லது டானிக் என்றும் அழைக்கலாம். தினமும் மூன்று வேளையும் தவறாமல் அருந்த  வேண்டும். அவ்வாறு அருந்தினால் மிக விரைவில் புற்றுநோய் குணமாகும்.
 
கருப்பை புற்றுநோய்: 
 
கருப்பை புற்றுநோய் தற்காலத்தில் பெண்களின் பெரும்பாலானவர்களுக்கு எளிதில் பற்றும் நோயாக இருக்கின்றது. இவ்வகை புற்று உண்டாவதற்கு பலவகை காரணிகள் கூறப்படுகின்றன. பெரும்பாலும் இவ்வகை புற்று நோய்கள் வந்தால் கருப்பையை அகற்றி விடுவதையே நிரந்தர தீர்வாக மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதனை பாரம்பரிய வைத்தியமான நித்திய கல்யாணியின் துணை கொண்டு முழுபலன்  பெற முடியும்.
 
பதினைந்து கிராம் அளவுள்ள நித்தியகல்யாணிப் பூக்கள் மற்றும் அறுநூறு மில்லி லிட்டர் தண்ணீரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.  இந்த கஷாயம் பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைத்து பின்னர் ஆற வைக்க வேண்டும். இதனை வடிகட்டி ஒரு வேலைக்கு 100 மில்லி  வரை குடிக்க வேண்டும். இதனை தினமும் நாள் தவறாமல் மூன்று வேளையும் நோய் தீரும் வரை குணமாகும் வரை குடிக்க வேண்டும்.
 
எச்சரிக்கை: கருத்தரித்த தாய்மார்கள் நித்திய கல்யாணியின் எந்தவித மருந்துகளையும் பயன்படுத்தக் கூடாது. மேலும் முறையாக வைத்தியரின் வழிகாட்டுதலின் பேரில் பௌஅன்படுத்துதல் அவசியமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்...!!