Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொலு வைப்பது எதற்காக?

கொலு வைப்பது எதற்காக?
, வியாழன், 2 அக்டோபர் 2014 (13:36 IST)
கொலு வைப்பது குறித்து, பதினெட்டு புராணங்களில் ஒன்றான மார்க்கண்டேய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளதை இங்கே காணலாம். 


 
 
தன் எதிரிகளை வெற்றி கொள்வதற்காக மகாராஜா சுரதா குரு சுமதாவின் ஆலோசனையைக் கேட்கிறார். 
 
குரு கூறியபடி பரிசுத்தமான ஆற்று மணலைக் கொண்டு காளி ரூபத்தைச் செய்கின்றான். அதைக் காளியாக அலங்கரித்து, தெய்வத்தின் மீது பற்றுடன் உண்ணா நோன்பிருந்து மனத்தாலும் மெய்யாலும் வேண்டுகிறான். 
 
அம்பிகை அவன் வேண்டுதலைப் பூர்த்தி செய்து அரக்கர்களையும், பகைவர்களையும் அழித்துப் பின் ஒரு புதுயுகத்தினையே உண்டு பண்ணுகிறாள்.
 
புராணத்தில், ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையினால் என்னைப் பூஜித்தால் நான் உனக்கு சகல சுகங்களையும், சௌபாக்கியங்களையும் அளிப்பேன் என்கிறாள் அம்பிகை தேவி 
 
இதனால் தான் நவராத்திரியில் கொலு வைத்து அம்மனைப் பூஜிக்கிறோம்.

Share this Story:

Follow Webdunia tamil