Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செம்பு பற்றி சித்தர்கள் கூறுவது

செம்பு பற்றி சித்தர்கள் கூறுவது

செம்பு பற்றி சித்தர்கள் கூறுவது
செம்பொன், செப்பு, தாமிரம் என சித்தர்களின் பாடல்களில் விவரிக்கப் பட்டிருக்கும் செம்பு பற்றிய தகவல்களை  பார்ப்போம். 


 
 
இரசவாதத்தில் செம்பு பெரிய அளவில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. செம்பை பொன்னாகவும், பொன்னை செம்பாகவும் மாற்றிடும் உத்திகளும் சித்தர்களால் அருளப் பட்டிருக்கிறது.
 
தங்கம், வெள்ளியை விட செம்பு உயர்ந்தது என்கிறார் போகர். தங்கமும், வெள்ளியும் உடல் என்றால் அவற்றை முழுமையாக்கும் உயிராக செம்பை குறிப்பிடுகிறார். அதாவது சிறிதளவு செம்பு சேர்ந்தால் மட்டுமே தங்கமும், வெள்ளியும் பயன்படுத்த முடியும் என்கிறார்.
 
செம்பில் இரண்டு வகை இருப்பதாகவும், அவற்றில் நோபாளம் என்பது உத்தம வகையைச் சேர்ந்தது என்றும், மிலோச்சன் என்பது மத்திய வகையை சேர்ந்தது என குறிப்பிடுகிறார். மேலும் அவற்றின் குணாதிசயங்களை பின்வருமாறு கூறுகிறார்.
 
உத்தம வகை செம்பானது அழுத்தமாகவும், மழுங்கலாகவும், பாரமாகவும் இருக்கும். இவை நன்கு செறிவான சிவப்பு நிறத்தைக் கொண்டது. மேலும் இதனை உருக்கினால் விகாரமடையாது. இதுவே நீர்பாளம் என்னும் உத்தம செம்பாகும் என்கிறார் போகர்.
 
மத்திய வகை செம்பானது வெளிர் சிவப்பு நிறமும், கருமையும் கலந்த நிறத்துடன் காணப்படும். இவை உத்தம வகை செம்பினைப் போல உறுதியாக இல்லாமல் சிதைந்த நிலையில் இருக்கும் என்கிறார் மேலும் இதனை உருக்க வெளிர் நிறம் நீங்கி கருமையடையும் என்றும் கூறிகிறார். இந்த வகை செம்பானது கனமில்லாமல் இருக்கும் என்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil