Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூட்சும முடிச்சுகளை அவிழ்க்கும் களரி

சூட்சும முடிச்சுகளை அவிழ்க்கும் களரி
, திங்கள், 1 ஏப்ரல் 2013 (20:44 IST)
ஏதோ படங்களில் வரும் சண்டைக் காட்சிகளால் வீர விளையாட்டுகள் இன்றும் உயிருடன் இருக்கின்றன என்றால் மிகையல்ல. ஒரு ஏழாம் அறிவு வர வேண்டும் களரி பற்றி உலகிற்குச் சொல்ல, ஒரு குங்ஃபூ பான்டா தமிழில் வேண்டும் குங்ஃபூ அழியாமல் காக்க. இத்தனை முக்கியத்துவம் கொடுத்து, பல வருடங்களாக நம் முன்னோர் வளர்த்த இந்த கலைகளின் மகத்துவம் என்ன?
FILE

சத்குரு:
உலகில் உள்ள தற்காப்புக் கலைகளிலேயே மிகவும் தொன்மை வாய்ந்தது களரியாகத்தான் இருக்க முடியும். முதன்முதலில் இவற்றை உருவாக்கி பயிற்றுவித்தவர் அகஸ்திய முனிவரே. தற்காப்புக் கலை என்றாலே யாரையாவது உதைப்பதோ அடிப்பதோ குத்துவதோ மட்டும் கிடையாது. இந்த உடலை முறையாக பயன்படுத்த என்னவெல்லாம் சாத்தியங்கள் உள்ளனவோ, அவை அனைத்தையும் கற்றுக்கொள்வது பற்றியதே தற்காப்புக் கலை.

ஆகையால், இதில் உடற்பயிற்சி மற்றும் துரிதமான அசைவுகளைப் பற்றிய அம்சங்கள் மட்டுமல்ல, ஒருவர் தன்னுடைய உடல் அமைப்பின் சக்தி ஓட்டத்தையே புரிந்துகொள்ளுதலும் அடங்கும். இந்த உடலின் ரகசியங்களை உணர்ந்து உடலை வேகமாக குணப்படுத்திடவும், உடலை புத்துணர்வூட்டவும் பயன்படும் விதங்களாக களரி சிகிச்சையும், களரி மர்மமும் உள்ளன.

இன்றைய உலகில் களரிப் பயிற்சி செய்பவர்களில், போதுமான அளவு நேரமும், சக்தியும் செலவு செய்து, முழுகவனத்துடனும் அர்ப்பணிப்புடனும் உள்ளவர்கள், மிகச் சிலரே இருக்கின்றனர். இருந்தும் இதில் ஒருவர் நன்கு ஆழமாக செல்லும்போது, அவர் யோகத்தை நோக்கி நகர்வது இயல்பாகவே நிகழும். ஏனென்றால், அகஸ்தியரிடமிருந்து தோன்றியது எதுவுமே ஆன்மீக சாரமில்லாமல் வேறெப்படியும் இருக்க முடியாது.

உண்பது, உறங்குவது, சிறுசிறு இன்பங்கள்-இவற்றைத் தவிர தங்கள் உடலைப் பற்றிய புரிதல் மனிதர்களுக்கு வேறொன்றும் கிடையாது. உடலின் ஆராயப்படாத பரிமாணங்கள் ஏராளமானவை. சில கராத்தே வல்லுனர்கள், லேசாக தொட்டாலே உங்களை சாகச் செய்யமுடியும், தெரியுமா?
லேசாக தொட்டு ஒருவரின் உயிரை எடுப்பது பெரிய விஷயம் கிடையாது. அதேபோல் தொடுவதன் மூலம், உங்களை உயிர்தெழுப்பிடுவதும் சாத்தியம். இது மிகப்பெரிய விஷயம். ஒருவரை தொடுவதன் மூலமாகவே உயிர்த்தெழும்படி செய்வது மிகப்பெரிய விஷயம். உங்கள் உடலை குறிப்பிட்ட விதமாக தொடுவதன் மூலம், உங்கள் அமைப்பு முழுவதையுமே விழித்தெழச் செய்திடலாம்.

மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்காக முனைவது மட்டுமே நம் நோக்கமாக இருந்திருந்தால், அது எனக்கு மிகவும் சுலபம். அது எனக்கு ஒரு பெரிய சவாலாகவே இருக்காது. ஆனால் நான் இந்த பிரபஞ்சத்தின் புலப்படாத சூட்சுமங்களை எல்லாம் மனித வாழ்வின் அனுபவத்திற்குள் நுழைத்திட விரும்புகிறேன். இது வேறுவிதமான பணி. அதற்கேற்ற செயல் தேவை.
முற்றிலும் மாறுபட்ட அளவிலான உறுதியும், கவனக்குவிப்பும், அர்ப்பணிப்பும் அவசியம். நம் மனித இனத்திற்கே இயற்கையாக உரித்த தடைகளையும், குறுகிய எல்லைகளையும் ஊடுறுவி, இயற்கை அமைத்துள்ள கட்டுப்பாடுகளை தாண்டியும் வாழ்வினை உணர்ந்திட, குறிப்பிட்ட தன்மையுடைய மனிதர்கள் தேவை. இது குறித்து நாம் அதிக கவனம் செலுத்தி செயல் செய்யும் நேரம் வந்துகொண்டே இருக்கிறது.

நான் விடைபெறுவதற்கு முன்பாக எனக்கு பின்னால் நான் விட்டுச் செல்பவையின் அளவை அதிகரித்திட விரும்புகிறேன். ஏனென்றால், இந்த அற்புதமான எந்திரத்தினை பற்றிய அம்சங்கள் ஏராளம், ஏராளம், ஏராளம். மனித குலத்தில் 99.99% இந்த உடலைப் பற்றிக்கூட எதுவுமே ஆராய்ந்துணராமல் போய்விடுகிறார்கள்.

அவர்கள் சிறிதளவு இன்பங்கள் அனுபவித்தாலே போதும், முடிந்தது. ஆனால் இந்த உடல் அப்படிபட்டது இல்லை. நீங்கள் அதனை நாட்டத்துடன் ஆராய்ந்தால், இந்த பிரபஞ்சமே அதனுள் உள்ளது. இந்த உடலால் மகத்தானவற்றை சும்மா உட்கார்ந்தபடியே செய்திட முடியும். இதுவே யோகத்தின் வழி. அதன் செயல் வடிவமே களரி.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil