மாதவிலக்கு என்பது கெட்ட ரத்தத்தின் வெளியேற்றமா?
, சனி, 1 டிசம்பர் 2012 (16:23 IST)
மாதவிலக்கு என்பது ஏதோ உடலில் இருக்கும் கெட்ட ரத்தம் வெளியேறுவது என்ற தவறான கருத்து பலரிடம் இருந்து வருகிறது. உடலில் கெட்ட ரத்தம் என்ற எதையும் வெளியேற்றும் வாய்ப்பை இதயம் விடுவதில்லை. கெட்ட ரத்தத்தை சுத்தமாக்கும் பணியைத்தானே இடைவிடாது இதயம் செய்து கொண்டிருக்கிறது.அப்படியிருக்க உடலில் கெட்ட ரத்தம் ஏது? கருப்பையில் உருவாகும் சில கழிவுகளை சுத்தம் செய்யவே இந்த உதிரப்போக்கு ஏற்படுகிறது.கருப்பையின் வாயானது 28 நாட்களுக்கு ஒரு முறை திறந்து அதனை சுத்தப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. கருப்பை சுருங்கி இருக்கும் போதைவிட, திறக்கும் போது அதற்கு அதிக இடம் தேவைப்படுகிறது. அப்படி கருப்பை விரிவடையும் போது மற்ற உடற்பாகங்களால் அது நசுக்கப்படலாம். அதனால்தான் மாதவிலக்கு சமயத்தில் கடுமையான வயிற்று வலி ஏற்படுகிறது.இதற்கு ஏற்ற உடற்பயிற்சிகளை செய்யலாம் அல்லது வலி நிவாரணிகளை சாப்பிடலாமேத் தவிர, மருந்து என்று ஏதும் இந்த வலிக்கு தீர்வு தராது.இனப்பெருக்க உறுப்புக்கள் அடுத்தக்கட்டமாக தாய்மை நிலையை ஏற்கத் தயார் என்பதைக் குறிப்பால் உணர்த்துவதுதான் மாதவிலக்கு. ஒவ்வொரு மாதமும் முட்டை கருவுற்று வருமென எதிர்பார்த்து, அதற்கு இடமளிப்பதற்காகக் கருப்பைத் தன்னை தயார் செய்து கொள்வதும் அவ்வாறு முட்டை கருவுறாது போகும் போது இருபத்தெட்டாம் நாளில் அதையும், வெளியேற்றிக் கருப்பையைச் சுத்தப்படுத்துவதும் மாதவிலக்கு நிகழ்வாகும்.மாதவிலக்கின் போது பிறப்புறுப்பு வழியாக உதிரத்துடன் கருப்பையிலிருந்து வெளியாகும் கழிவுகள் நீக்கப்படுகின்றன.இது ஒரு பெண் கருவுற்றிருந்தால் ஒழிய, ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக சில நாட்களுக்கு மட்டுமே ஏற்படும் நிகழ்ச்சியாகும். அந்நாட்களில் மற்ற பணிகளில் இருந்து பெண்களை விலக்கி வைக்கப்பட்டதால் மாத விலக்கு என்று தொன்றுதொட்டு சொல்லப்படுகிறது.பதினொன்று முதல் பதின்மூன்று வயதில் தொடங்கும் மாதவிலக்கு, மெனோபாஸ் காலம் வரை தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும்.ஒவ்வொரு மாதப்போக்கு சுழற்சியின் இடைவெளி 21 முதல் 40 நாட்களுக்குள் வருகிறது. 15 சதவீதத்தினருக்கும் குறைவான பெண்களுக்கு மட்டும் சரியான சுழற்சி காலமான 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு ஏற்படுகிறது. மற்றவர்களுக்கு 23 முதல் 34 நாட்களுக்கு ஒரு முறை மாதப்போக்கு வெளியாகிறது.ஒவ்வொரு முறையும் நல்ல உடல்நலமுள்ள பெண்ணுக்கு ஏறக்குறைய 80 மில்லி லிட்டர் ரத்தம் ஐந்து அல்லது ஆறு நாட்களுக்குள் வெளியாகிறது. மாதவிலக்கின் ஆரம்பத்தில் ரத்தப்போக்கு அதிகமாகவும், முடிகிற நாளில் குறைவாகவும் காணப்படுகிறது.மாதவிலக்குச் சுழற்சியைகருவணுக்கூடு தூண்டப்படும் காலம்முட்டை வெளிப்படும் காலம்கருத்தரிப்பை ஒழுங்குபடுத்தும் காலம்என்று பார்ப்பதே மருத்துவ முறையில் மேற்கொள்ளும் அணுகுமுறையாகும்.