பாலியல் வன்முறை செய்பவர்கள் கிரிமினல்கள். எனவே அவர்களுக்கு அந்த அளவுக்கு மரியாதை கொடுத்தால் போதும். அப்படிப்பட்ட ஆசாமிகளிடம் உங்கள் வெறுப்பை வெளிப்படையாகக் காட்டுங்கள்.
உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தில் 70 சதவிகித நேரத்திற்கு மட்டுமே பிரசன்டேஷனை தயாரித்து, பேசிப் பழகிக் கொள்ளுங்கள்.
ரெஸ்யூமே என்பது உங்கள் சுய விவரங்களின் தொகுப்பு. அதில் மீண்டும் மீண்டும் "நான்", "என்", "எனக்கு" போன்ற வார்த்தைகளை உபயோகிப்பது தேவையற்றது.
நீங்கள் இதுவரை பணியாற்றிய நிறுவனத்தைப் பற்றி பிறரிடம் இகழ்ந்து பேச வேண்டாம். இதனால் எதிர்காலத்தில் உங்களுக்கு வேறு வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம்.
விருப்ப உங்களுக்கு விருப்பமான வேலையைச் செய்ய தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்ளவும்.
இன்டர்வியூக்கு செல்லும் முன், அந்த நிறுவனத்தை பற்றி ஆராய்ந்து தெரிந்து கொள்வது நல்லது.
தவறாமல் தினமும் செய்திகளை படித்தோ, கேட்டோ தெரிந்து கொள்ளவும். பிறருடன் பேச சுவாரஸ்யமான விஷயங்கள் கிடைக்கும். உங்கள் பொது அறிவும் வளரும்.
உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை படித்தவுடன் பரிவு படுத்திவிடவும். தேவையில்லாதவற்றை நீக்கி விடவும். இதை உடனுக்குடன் செய்வதால் இதற்காக தனியாக நேரம் ஒதுக்க தேவையில்லை.எந்த தொழிலை தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களோ, அந்தத் தொழிலில் முன்பே அனுபவபட்டவர்களிடம் அந்தத் தொழிலில் உள்ள நன்மை தீமைகளைப் பற்றி அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
உயர் அதிகாரிகள் நூற்றுக்கணக்கில் ஈ மெயில்களைப் பெறுவார்கள். ஆகவே சரியான தலைப்புக்களில் செய்திகளை அனுப்பி அவரது கவனத்தைக் கவர முயற்சி செய்யுங்கள்.
ஒரு பக்கம் மட்டும் சுருக்கமாக இருக்கும் ரெஸ்யூமேயின் காலம் போய்விட்டது. இப்பொழுது ரெஸ்யூமே இரண்டிலிருந்து நாலு பக்கங்கள் இருப்பது நல்லது.