பச்சை மிளகாயை ஃப்ரீஜருக்குள் வைத்தால் இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். ஒரு நிமிடம் தண்ணீரில் போட்டு வைத்து இதை பயன்படுத்தவும். இதே முறையில் தேங்காயையும் வைக்கலாம்.-சுஜாதா (செயிண்ட் லூயிஸ், யு.எஸ்.ஏ.)
ஒரு கோப்பை வினிகருடன் மூன்று கோப்பை தண்ணீரை கலந்து ஜன்னல்களை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம்.-ஷரீன் (ஓன்டாரியோ, கனடா)
துணிகளில் பட்ட எண்ணெய் கரையை நீக்க, முகத்திற்கு தடவும் பவுடரை கரை மேல் போடுங்கள். சிறிது நேரம் விட்டு எப்பொழுதும் போல் துணியை கழுவுங்கள். கரை காணாமல் போகும்.- பர்வீன் (ஹோசூர்)
கறியை விரைவாக சமைக்க, அத்துடன் சிறிதளவு மசித்த பப்பாளியை சேர்க்கவும்.கீரையை சமைக்கும்போது பச்சை நிறம் மாறாமல் இருக்க ஒரு சிட்டிகை ஆப்பசோடாவை அல்லது பேக்கிங் சோடாவை சேர்க்கவும்.- நீலோஃபர் (ஈரோடு)
செம்பு பொருட்களை தக்காளி கெட்சப்பால் கழுவினால் அவை பளபளப்பாக இருக்கும்.-ராஜலக்ஷ்மி முருகேசன் கனடா
பச்சை காய்கறிகள் சமைக்கும்போது மூடிபோட்டு சமைத்தால், சீக்கிரம் சமைக்கலாம். அத்துடன் அவற்றின் சத்தும் வெளியேராது.-மீனாக்ஷி மணிகண்டன் பிரிட்டன்
வறுத்த வேர்கடலையை சிறிய துண்டுகளாக்கி பீன்ஸ், மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தால் ருசியாக இருக்கும்.
பச்சை மிளகாயின் காம்பை நீக்கிவிட்டு ஃபிரிட்ஜில் வைத்தால், நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
கோந்து கரைகளை துணிகளிலிருந்து நீக்க சிறிது நேரம் வெந்நீரில் ஊற வைத்து, பிறகு துவைக்கவும்.
வறுத்த வேர்கடலையை உடைத்து பொரியல் செய்யும் போது சேர்த்துக் கொண்டால், கூடுதல் சுவையும், சத்தும் கிடைக்கும்.
பச்சை மிளகாயை ஃபிரிட்ஜில் வைப்பதற்கு முன் அதன் காம்பை நீக்கிவிட்டால், நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
துணிகளில் கோந்து பட்டுவிட்டால், அவற்றை வெந்நீரில் ஊர வைத்து துவைத்தால் கறை நீங்கும்.-சுபா வாசுதேவன்.
சிங்கப்பூர். டையாபெடிக்ஸ் (நீரிழிவு நோய்) இருப்பவர்கள் தினமும் வெந்தயப் பொடியை சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.- தீபா. ராஜபாளையம்.முட்டைகளை வேக வைக்கும் போது, அவை உடையாமல் இருக்க ஒரு எளிய வழி. 2 தேக்கரண்டி புளிக்காடியை (வினிகர்) வேகவைக்கும் தண்ணீரில் சேர்க்கவும். இது முட்டை ஓடு உடைவதை தடுக்கும். - மதுரா.சி குவைத்
வெய்யிலில் கருத்த சருமத்தை வெண்மையாக்க `ப்ளீச்‘ சிறந்தது. இதோ வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய `ப்ளீச்‘ :
பன்னீர், கடலைப்பருப்பு பொடி, எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்றாக கலந்து உபயோகிக்கவும். நல்ல பலன் கிடைக்கும். - மைதிலி பார்த்தசாரதி(சென்னை)
சாப்பிடுவதற்கு முன்பும், சமைப்பதற்கு முன்பும் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். இதனால் கிருமிகள் அழிந்து, கை சுத்தமாகும்.- சசிரேகா(குமாரபாளையம்)
தயிர் செய்ய வேண்டும். ஆனால் பாலில் போட தயிரோ, மோரோ இல்லையென்றால் மிளகாய் வற்றலை உடைத்து பாலில் போடவும். அடுத்த நாள் தயிர் ரெடி - மோகனசுந்தரி, சென்னை.
நினைவாற்றல் பெருக துளசி இலையை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரைக் குடிப்பது நல்லது. பசுமையான வில்வ இலைகளை அரைத்து சாறு எடுத்து குடித்து வந்தால் ஞாபக மறதி நீங்கி நினைவாற்றல் பெருகும்.
தூதுவளை கீரையை குழம்பு மற்றும் பொரியல் செய்து வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் மூளைக்கு வலிமை கிடைக்கும்.
வல்லாரை கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி பருப்பு போட்டு பொரியல் செய்து சாப்பிட்டால் நினைவாற்றல் பெருகும்.எம். அருள் வாணி
கரப்பான் பூச்சிகளை ஒழிக்க : சிறிதளவு பால்பவுடர், தேன், போரிக் பவுடர் ஆகியவற்றை எடுத்து தண்ணீருடன் சேர்த்து சிறு உருண்டைகளாக பிசைந்து கொள்ளவும். இந்த உருண்டைகளை கரப்பான் பூச்சிகள் வரும் இடங்களில் வைத்தால், அவற்றை தின்று கரப்பான்கள் இறந்து விடும். மீண்டும் வராது.
- சி. மதுரா, குவைத்.
கவனம் : குழந்தைகள் இவற்றை எடுத்து தின்று விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்சப்பாத்தி மாவை தயாரிக்கும் போது தயிர் அல்லது முட்டை சேர்த்துக் கொண்டால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும்.சுரையா, சென்னை
கதவு மூடும் போதும் திறக்கும் போதும் கேட்கும் சத்தத்திலிருந்து விடுபட கதவின் கீல்களில் திரவ சோப் சில துளிகள் விடலாம்.
பாத்ரூம் கண்ணாடி மங்கி விட்டதா? சிறிது ஷேவிங் க்ரீமை கண்ணாடியில் தடவி, சுத்தமான துணியால் துடைக்கவும்.
தரை கம்பளத்தை மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறை தேவைக்கேற்ப அவசியம் ஷாம்பூ போட்டு சுத்தம் செய்யவும். இது உங்கள் கார்பெட்டை பழுதடையாமல் நீண்ட நாட்கள் காக்கும்.
சமயலறையில் ஸிங்க்கில் அடிக்கடி சூடான உப்பு கலந்த தண்ணீரை ஊற்றவும். இதனால் துர்நாற்றமும் எண்ணெய் பிசுக்கும் நீங்கும்.
ஒரு கப் வெந்நீரில் 2 டேபிள் ஸ்பூன் உப்பை கலந்து வியர்வை கரைகள் மீது கரை நீங்கும் வரை தடவி வைக்கவும். பிறகு துணிகளை எப்போதும் போல் துவைக்கவும்.
ஒரு சிறிய கரித் துண்டை (சார்க்கோல்) ஃபிரிட்ஜின் உள்ளே வைத்தால், நாற்றம் ஏற்படுவதை தடுக்கலாம்.
வினிகர் கலந்த நீரில் ஃபிளாஸ்கை கழுவினால், அதிலுள்ள துர்நாற்றம் நீங்கும்.