Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண்கள் வெளியில் சொல்ல கூச்சப்படும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று!!

பெண்கள் வெளியில் சொல்ல கூச்சப்படும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று!!
பெண்கள் வெளியில் சொல்ல கூச்சப்படும் பிரச்சனைகளில் இந்த வெள்ளைப்படுதல் பிரச்சனையும் ஒன்று. அதிகமாக வெள்ளைப்படுவதை பொறுத்த வரையில், மிகவும் சாதாரணமாக வரக்கூடிய பிரச்சனையா அல்லது உண்மையிலேயே கவனிக்க வேண்டிய பிரச்சனையா என்பதைப் பெரும்பாலான பெண்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை.

 
 
ஒருவிதமான துர்நாற்றத்துடன் அதிகப்படியான வெள்ளைப்படுதல் பெண்ணுறுப்பிலிருந்து வெளியேறுவதற்கு பூஞ்சைகளால் உருவாக்கப்பட்ட வஜினைட்டிஸ் அல்லது பெண்ணுறுப்பில் தொற்று ஏற்பட்டிருத்தல் ஆகியவை காரணமாக இருக்கலாம். இதன்  காரணமாக அரிப்பும், கெட்டியான வெள்ளைப்படுதலும் ஏற்படும். 
 
பாக்டீரியா தொற்று காரணமாக இருந்தால் வெள்ளைப்படும் திரவம் மெலிதானதாகவும், பச்சை நிறத்திலும் இருப்பதுடன், துர்நாற்றமடிக்கவும் செய்யும். முறையான கவனிப்பு இல்லாமல் போனால் இந்த பிரச்சனை உங்களை UTI என்ற  பிரச்சனைக்குள் தள்ளிவிடும்.
 
பெண்கள் பலரும் இந்த சிறுநீர்பை கட்டுப்பாட்டுப் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார்கள். இருமல், தும்மல் அல்லது கடுமையான வேலையின் போதும் தான் 73% பெண்களுக்கு இந்தத் தொந்தரவு வருகிறது. இதற்கு தீர்வு கான இடுப்பை வளைத்து செய்யும் உடற்பயிற்சி போன்ற சிலவற்றால் இந்த சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டை சரிசெய்ய முடியும்.
 
சிற்சில மாற்றங்களை நம்முடைய தினசரி வாழ்க்கையில் மாற்றிக் கொள்வதன் மூலம் இந்த தொந்தரவிலிருந்து எளிதில்  விடுபட முடியும். ஆனால், இது உங்களுக்கு மிகவும் பிரச்சனையைத் தருவதாக நினைத்தால், தயங்காமல் மருத்துவரின் உதவியை நாடிச் செல்லவும்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஃபிஷ் ரோல் செய்ய தெரியுமா...?