ஆர்கே நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால் இந்த தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
குறிப்பாக ஆளும் அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. கடந்த முறை ஓபிஎஸ் அணி தவிர ஒட்டுமொத்த அதிமுகவின் ஆதரவுடன் களமிறங்கிய டிடிவி தினகரன் இந்த முறை போட்டியிட தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
ஆளும்கட்சியின் அதிகாரத்தையும் மீறி வெற்றி பெறுவது கடினம் என்றும் இரட்டை இலை இல்லாமல் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் தினகரன் முடிவு செய்திருப்பதாகவும், எனவே ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் பிரியாமல் இருக்க திமுகவுக்கு ஆதரவு தர அவர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது