புதுச்சேரி கவர்னர் கிரண் பேடிக்கும் முதல்வர் நாராயணசாமி இடையிலான இடைவெளி அதிகரித்து கொண்டே போகிறது. இருவருக்கும் ஏற்பட்டுள்ள அதிகார போட்டியால் கிரண் பேடியை திரும்பப் பெற வேண்டும் என ஆளும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கிரண்பேடி அளித்த ஒரு பேட்டியில் பொதுமக்களையும் அதிகாரிகளையும் நான் சந்தித்து அவர்களுக்கு தேவையானதை செய்ய நடவடிக்கை எடுப்பது தவறா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
யூனியன் பிரதேச சட்டம் 1963-ன்படி, தனித்து இயங்கும் அதிகாரங்கள் துணைநிலை ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த முதன்மை அதிகாரங்கள், சட்ட அதிகாரங்களுக்கு இணையானவை. நிதி தொடர்புடைய அதிகாரங்கள், துணைநிலை ஆளுநரின் கைகளிலேயே உள்ளன. துணைநிலை ஆளுநரின் அதிகாரம் பற்றி சட்ட விதிகளில் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அது மதிக்கப்பட வேண்டும்.
வளமான புதுச்சேரியாக இந்தப் பிரதேசத்தை மாற்றுவதற்கு, எனக்கு நானே இரு ஆண்டுகள் காலஅவகாசம் நிர்ணயம் செய்திருக்கிறேன். நானோ, என் வாழ்க்கையோ, என் எண்ணமோ பதவியைச் சார்ந்து இருக்கவில்லை. நான் புதுவையைவிட்டு வெளியேறுவதற்கான நேரம் வரும்போது, விதி அதைத் தீர்மானிக்கும்.”