Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா அவசர அலோசனை: இடைத்தேர்தல் பரபரப்பு; பயத்தில் தினகரன் அண்ட் கோ!!

தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா அவசர அலோசனை: இடைத்தேர்தல் பரபரப்பு; பயத்தில் தினகரன் அண்ட் கோ!!
, வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (13:17 IST)
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடந்துள்ளது உறுதியான நிலையில், சிறப்புத் தலைமைத் தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.


 
 
ஆர்.கே.நகரில் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இன்று காலை தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமானவரித்துறை சோதனையைத் தொடங்கியது. 
 
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடத்திருப்பது தொடர்பாகவே சோதனை நடத்தப்படுவதாகவும் அதிகாரிகள் அறிவித்தனர். இதற்காக, துணை ராணுவப்படையும் வரவழைக்கப்பட்டது.
 
எம்எல்ஏக்கள் விடுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் அறையிலிருந்து ரூ.1.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. எழும்பூரில் உள்ள தனியார் விடுதி அறை ஒன்றில் பணப்பட்டுவாடா தொடர்பான கணக்கு வழக்குகள் எழுதப்பட்ட ஆவணங்கள் சிக்கியுள்ளன.
 
இதுகுறித்து தமிழகத்தின் சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா, தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆகியோர் அவசர ஆலோசனை நடத்திவருகின்றனர்.
 
இந்நிலையில், ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலை திட்டமிட்டபடி முறையாக நடத்தமுடியுமா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூதாட்டியை பலாத்காரம் செய்த பிளம்பர்: அவமானம் தாங்காமல் மூதாட்டி தற்கொலை!!