Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அறிக்கை எழுதி கொடுப்பவர் திமுகவில் ஐக்கியம் : இனி என்ன செய்வார் விஜயகாந்த்?

அறிக்கை எழுதி கொடுப்பவர் திமுகவில் ஐக்கியம் : இனி என்ன செய்வார் விஜயகாந்த்?
, புதன், 13 ஜூலை 2016 (15:13 IST)
அரசியல் ரீதியான அறிக்கைகளை தயாரித்து தரும் முக்கிய நபர் தேமுதிகவில் இருந்த விலகி திமுகவில் இணைந்துவிட்டதால், விஜயகாந்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


 

 
விஜயகாந்த் கட்சி தொடங்கிய சில வருடங்கள் கழித்து, தேமுதிகவில் இணைந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். அவர்தான், விஜயகாந்திற்கு முக்கிய ஆலோசகராக விளங்கினார். 2011 சட்டமன்ற தேர்தலின் போது, அதிமுகவுடன் கூட்டணி வைக்க கூட இவர்தான் காரணமாக இருந்தார். மேலும், அவரது ஆலோசனையின் பேரில்தான் அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருந்தன.
 
அதன்பின், அவர் விஜயகாந்தின் செயல்பாடுகள் மீதி அதிருப்தி அடைந்து, அதிமுகவிற்கு தாவி விட்டார். அதன்பின், பேராசிரிய ரவீந்திரன் என்பவர் விஜயகாந்திற்கு உறுதுணையாக இருந்து வந்தார்.
 
விஜயகாந்திற்கு நெருக்கமானவராகவும், ஆலோசகராகவும் விளங்கினார் ரவீந்திரன். ஏறக்குறைய பண்ருட்டியாரின் இடத்திற்கே முன்னேறினார். விஜயகாந்த் பெயரில் பல்வேறு புள்ளி விவரங்களைக் கொண்ட அறிக்கைகளை அவர்தான் தயாரித்துக் கொடுத்தார் என்கிறார்கள்.
 
இந்நிலையில், அவரும் தற்போது திமுகவிற்கு சென்று விட்டார். இதனால் விஜயகாந்த் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளாராம்.  தேமுதிகவில் இருந்த முக்கிய அறிவுஜீவியை விஜயகாந்த் இழந்துவிட்டார் என்று கட்சிக்குள் பேசிக் கொள்கிறார்கள்.
 
ஒருபக்கம், கட்சி நிதிகுறித்து மக்கள் தேமுதிகவினர் வெள்ளை அறிக்கை கேட்டு விஜயகாந்திற்கு குடைச்சல் கொடுத்து வருகின்றனர். அவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை தயார் செய்யும்  நபர்கள் தேமுதிகவில் தற்போது இல்லை என்பதால், விஜயகாந்த் அப்செட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு ஒரு சாமானியனின் கடிதம்