Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எம்.பி, எம்.எல்.ஏ திரும்ப பெறும் மசோதா. வருண்காந்தியின் அதிரடியால் அரசியல்வாதிகள் அச்சம்

Advertiesment
, புதன், 1 மார்ச் 2017 (21:53 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் குழப்பம் நிலவிய நிலையில் மக்களுக்கு விரோதமான ஆட்சி அமைந்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வெளிப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் எம்.எல்.ஏக்களை திரும்ப பெறும் அதிகாரம் மக்களுக்கு வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன.




இந்த நிலையில் மேனகா காந்தியின் புதல்வரும், பாஜக எம்பியுமான வருண்காந்தி தனிநபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளார். சரியாக செயல்படாத எம்.பி., எம்.எல்.ஏவை திரும்ப பெறும் உரிமையை வாக்காளர்களுக்கு அளிக்க வேண்டும் என்று தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

எம்.பி., எம்.எல்.ஏக்களை தேர்ந்தெடுக்கும் உரிமை ஓட்டும் போடும் வாக்காளர்களுக்கு உள்ளது. அதுபோல சரியாக செயல்படாத எம்.பி., எம்.எல்.ஏக்களை திரும்பப் பெறும் உரிமையையும் வாக்காளர்களுக்கு அளிக்க வேண்டும்.

இந்த உரிமையை பெறுவதற்கு ஒரு தொகுதியை சேர்ந்த வாக்காளர்களில் குறைந்தபட்சம் 25 சதவீதம் பேர் கைழுத்திட்ட மனுவை சபாநாயகருக்கு அளிக்கலாம். அந்த மனு மீதான நம்பகத்தன்மையை தேர்தல் கமிஷன் உறுதி செய்த பின் சரியாக செயல்படாத எம்.பி., எம்.எல்.ஏக்களை திரும்ப பெறுவதற்கான ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். இந்த ஓட்டெடுப்பில் 75 சதவீதம் பேர் திரும்ப பெறுவதற்காக ஓட்டளித்தால் எம்.பி.,எம்.எல்.ஏக்களின் பதவியை பறித்து இடைத்தேர்தல் நடத்தலாம் என்று வருண் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வருண்காந்தி எம்பியின் இந்த மசோதாவினால் சரியாக செயல்படாத எம்.பி, எம்.எல்.ஏக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக அலுவலகத்தை சூறையாடிய மாணவர்கள்