தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளரும், லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுகொண்டார். அப்போது அவர் பேசுகையில், அம்மா வழியில் இம்மி அளவும் பிசகாமல் நடப்போம் என்றார். இந்த சூழ்நிலையில் அவர் முதல்வராகவும் பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் சிலர் கோரிக்கை விடுத்தனர்.
சசிகலாவை முதல்வராக ஏற்க மத்திய அரசுக்கு விருப்பம் இல்லை என்றே கூறப்படுகிறது. முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு மட்டுமே தங்களது ஆதரவு என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தம்பிதுரை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழக முதலமைச்சராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும். என்னை போன்ற தொண்டர்களின் கோரிக்கையை அவர் ஏற்கவேண்டும். கட்சி தலைமையும் ஆட்சி தலைமையும் ஒருவரிடமே இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.