தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டது என்றும் எனவே அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிய முதல்வரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் தினகரன் அணியினர் கூறி வருகின்றனர். மேலும் தங்களுக்கு 22 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும், 49 எம்.எல்.ஏக்கள் ஸ்லீப்பர் செல் ஆக இருப்பதாகவும் தினகரன் கூறி வருகிறார்.
இந்த ஸ்லீப்பர்செல் எம்.எல்.ஏக்கள் எந்த பக்கம் ஆதரவு கொடுக்கின்றார்களோ அவர்கள் தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை தற்போது உள்ளது. தினகரன் அணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 22 பேர், ஸ்லீப்பர்செல் எம்.எல்.ஏக்கள் 49 பேர் ஆகியோர்களை கழித்துவிட்டால் எடப்பாடி அணியில் 64 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளதாக தெரிகிறது.
திமுக கூட்டணியில் 98 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளதால் ஸ்லீப்பர்செல் எம்.எல்.ஏக்கள் அந்த கூட்டணிக்கு ஆதரவு கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்