Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சரியாக பேச தெரியாமல் திணறும் சசிகலா - நிர்வாகிகள் அதிர்ச்சி

Advertiesment
சரியாக பேச தெரியாமல் திணறும் சசிகலா  - நிர்வாகிகள் அதிர்ச்சி
, வெள்ளி, 6 ஜனவரி 2017 (10:11 IST)
ஜெ.வின் மறைவிற்கு பின் அவரது தோழி சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், அவரை முதல்வர் இருக்கையில் அமரவைக்க அதிமுக முக்கிய அமைச்சர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


 

 
அதிமுக அமைச்சர்கள் மற்றும் மேல்மட்ட நிர்வாகிகள் அவருக்கு ஆதரவாக நின்றாலும், கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் கீழ்மட்ட நிர்வாகிகள் மத்தியில் அவருக்கு கடும் எதிர்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
ஜெ.வுடன் பல அரசியல் கூட்டத்திற்கு அவர் சென்று வந்தாலும், இதுவரை அவர் எந்த மேடையிலும் பேசியதில்லை. ஜெ. பேசும் போது வேடிக்கை பார்ப்பதை மட்டுமே வாடிக்கையாக கொண்டிருந்தார் சசிகலா. ஆனால், ஜெ.வின் மறைவிற்கு பின் அதிமுக பொதுச்செயலாளர் பதவி அவரை தேடி வந்தது. ஆனால் அவர் எப்படி அரசியல் மேடைகள், நிர்வாகிகள் கூட்டம் ஆகியவற்றில் பேசுவார் என்பது பற்றி அதிமுக அமைச்சர்கள் யோசிக்கவில்லை. 
 
அந்நிலையில்தான் கடந்த மாதம் 31ம் தேதி அவர், அதிமுக தலைமை கழகம் வந்து பொதுச்செயலாளராக பதவியேற்றுக்கொண்டார். அப்போது அங்கிருந்த நிர்வாகிகள் முன்பு முதல் முறையாக மேடையேறி பேசினார்.  எழுதி வைத்திருந்ததை படித்த போது கூட அவரால் சரளமான படிக்க முடியவில்லை. நிறைய இடத்தில் தடுமாறினார். ஜெ.வை பற்றி பேசும் போது கண்ணீர் சிந்தினார். 
 
வீட்டில் பலமுறை பயிற்சி எடுத்திருந்ததால், எப்படியோ சமாளித்து அந்த உரையை நிறைவு செய்தார் சசிகலா. ஆனால் நடந்து கொண்டிருக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசமுடியாமல் தடுமாறுவது தெரியவந்துள்ளது.
 
அதிமுக மாவட்ட நிர்வாகிகளின் ஆதரவை பெறுவதற்காக, நிர்வாகிகள் கூட்டத்தை சசிகலா கடந்த 4ம் தேதி, அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டினார் சசிகலா. இக்கூட்டம் வருகிற 9ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் அவர் ஒவ்வொரு நாளும் சில மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசிவருகிறார்.
 
ஜெ.வை போல் நடை, உடை, சிகை அலங்காரம் ஆகியவற்றை மாற்றிக்கொண்ட சசிகலாவால், ஜெ.வை போல் பேச முடியவில்லை.  நிர்வாகிகள் மத்தியில் பேசும் போது எழுதி வைத்திருந்ததையும் சரியாக பார்த்து படித்து அவரால் பேச முடியவில்லை. மேலும், எழுதி வைக்கமாலும் அவரால் பேசமுடியவில்லை என்பதை பார்த்த நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனராம். 
 
நிர்வாகிகள் மத்தியிலேயே பேச தெரியாதவர், எப்படி பொதுக்கூட்டங்களில் மக்கள் மத்தியில், அவர்களை கவரும் வகையில்  பேசுவார் என்ற சந்தேகம் நிர்வாகிகளுக்கு எழுந்துள்ளதாம். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலாவிற்கு 63 சதவீத அதிமுகவினர் எதிர்ப்பு - சர்வே தரும் தகவல்