Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறையில் இருந்தபடியே மீண்டும் ஆட்சிமன்றக் குழு தலைவரானார் சசிகலா!

Advertiesment
சிறையில் இருந்தபடியே மீண்டும் ஆட்சிமன்றக் குழு தலைவரானார் சசிகலா!
, வியாழன், 9 மார்ச் 2017 (18:57 IST)
கழகப் பொதுச் செயலாளர் சசிகலா, அதிமுக ஆட்சிமன்றக் குழு தலைவராக செயல்படுவார் என்று கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.


 

இது குறித்து கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழக ஆட்சிமன்றக் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதன்படி, கழகப் பொதுச் செயலாளர் சசிகலா குழு தலைவராக செயல்படுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களாக, கழக அவைத்தலைவர் கே.ஏ.செங்கோட்டையன், கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் திரு. அ.தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுள்ளனர்.

மேலும், கழக இலக்கிய அணிச் செயலாளர் பா.வளர்மதி, கழக மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் பி.வேணுகோபால், கழக சிறுபான்மையினர் நலப்பிரிவுத் தலைவர் ஏ.ஜஸ்டின்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பினாமிக்கு வெட்கமில்லாமல் ஆதரவளிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் - கொந்தளிக்கும் கட்ஜூ