Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசிகலாவை கடுமையாக தாக்கிய சசிகலா புஷ்பா

Advertiesment
சசிகலா புஷ்பா
, திங்கள், 10 அக்டோபர் 2016 (20:13 IST)
மாநிலங்களவை எம்.பி சசிகாலா புஷ்பா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டதன் பின்னால் சதி நடந்திருப்பதாக கூறியுள்ளார்.


 

 
மாநிலங்களவை எம்.பி.சசிகலா புஷ்பா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டதன் பின்னால் சதி நடந்திருப்பதாக கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
 
முதலமைச்சர் அவர்களின் தற்போதைய நிலைமை என்னவென்று மிகுந்த வருத்தம் அதிமுக தொண்டர்களுக்கு உள்ளது. நன்றாக இருந்தவருக்கு திடீரென்று டிஹைட்ரேஷன் என்று கூறி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்படி அவர்களுக்கு டிஹைட்ரேஷன் ஏற்படுவதற்கு காரணம் என்ன? கடந்த இரண்டு மாதங்களாக அவருக்கு என்ன மருந்துகள் வழங்கப்பட்டது? என்று எதுவும் தெரியவில்லை.
 
அதனால் இதை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். அவர் தானாக உடலெஅலம் பாதிக்கப்பட்டாரா? இல்லை பின்னால் இருந்த கும்பலால் ஆக்கப்பட்டாரா? என்று தொண்டர்கள் இந்த விஷயத்தில் மிகுந்த வேதனையுடன் இருகிறார்கள்.
 
என் ஆட்சியை கவிழ்ப்பதற்காக துரோகம் செய்தார்கள், என் பின்னால் இருந்து சதி செய்தார்கள் என்று சசிகலா நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டு வைத்து 2011ஆம் ஆண்டு கட்சியில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கினார். 
 
மீண்டும் இப்போது 2016ஆம் ஆண்டு அப்படி எதும் சதி செய்யப்பட்டதா? என்ற கவலை தொண்டர்கள் மத்தியிலும், எனக்கும் எழுந்திருக்கிறது. 
 
சசிகலா நடராஜன் அவர்கள் ஏன் கட்சியை கைப்பற்ற கூடாது? ஏன் துணை முதலமைச்சர் பதி வகிக்க கூடாது? ஏன் தஞ்சாவூரில் தேர்தலில் போட்டியிட கூடாது? என்று அவர்களே வேறொருவர் கூறுவது போல் பத்திரிக்கைகளில் செய்திகளை பரப்பி வருகின்றனர், என்று கூறினார்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பில் கிளிண்டனின் பாலியல் வரலாற்றை டிரம்ப் கிளறுவாரா?