Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலினுக்கு எஸ்; சசிகலாவுக்கு நோ - ரஜினியின் ரியாக்சன்

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2017 (13:52 IST)
ரஜினியின் சமீபத்திய பேச்சு அரசியல் வட்டாரத்தில் அனைவருடைய கவனத்தையும் திருப்பியுள்ளது. குறிப்பாக அதிமுக வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

 

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று ஒவ்வொரு வருடமும் அவரது பிறந்த நாளில் ரசிகர்கள் கோரிக்கை வைப்பது வழக்கம். அதற்கு ரஜினியின் ரியாக்சனோ ஒன்றும் இருக்காது. இது வழக்கமான ஒன்றுதான். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து சற்று கூடுதலாக கோரிக்கைகள் எழுந்தன. ஆனாலும் பதில் எதுவும் சொல்லாமல் இருந்த ரஜினி, துகளக் விழாவில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற துக்ளக்  ஆண்டு விழாவில் சோ ராமசாமி உருவப்படம் திறப்பு விழாவில் கலந்துகொண்ட ரஜினி பேசும்போது, தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது என்று கூறினார். இவரது இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அதிமுக வட்டாரம் கூடுதல் கவலையில் உள்ளதாம். ஏற்கெனவே அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலாவுக்கு தமிழமெங்கும் எதிர்ப்புகள் அதிகரித்துவரும் நிலையில் ரஜினியின் இந்த பேச்சு அவர்களை கவலை அடைய செய்துள்ளது.

சமீபத்தில் திமுக செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலினுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த், அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் ஊழியர்கள் நள்ளிரவில் திடீர் கைது.. என்ன காரணம்?

நாளை முதல் 4 நாட்களுக்கு அரசியல் தான்: நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்யும் விஜய்,..!

வேங்கைவயல் விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் யார்? மறுவிசாரணை தேவை! - தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

இது பெரியார் மண் இல்ல.. பெரியாரே ஒரு மண்ணுதான்! - மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சீமான்!

13 ஆண்டுகளாகியும் பணி நிலைப்பு வழங்கவில்லை.. இதுதான் திமுக அரசின் சமூகநீதியா? டாக்டர் ராமதாஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments