தரையிறங்க இருந்த சரக்கு விமானம் வெடித்து சிதறி 32 பேர் பலி!

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2017 (13:30 IST)
கிர்கிஸ்தான் தலைநகர் பைஸ்கெக் விமான நிலையத்தில் இன்று காலை சரக்கு விமானம் ஒன்று தரை இறங்குவதற்கு வந்து கொண்டிருந்தது. அப்போது, அப்போது எதிபாராதவிதமாக வெடித்து சிதறியது.

 
துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்க இருந்த நிலையில் வெடித்து சிதறி மக்கள் தொகை அதிகம் நிறைந்த குடியிருப்புப் பகுதியில் விழுந்ததில் 32 பேர் பலியாயினர்.
 
இறந்தவர்கள் அனைவரும் டாச்சா சூ என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் ஹாங்காங்கில் இருந்து இஸ்தான்புல் வழியாக கிர்கிஸ்தான்தலைநகர் பைஸ்கெக் வந்து கொண்டிருந்தபோது இந்த  சம்பவம் நடந்துள்ளது. 
 
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 4 விமான ஓட்டிகளும் பலியாயினர் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது. விமானம் விழுந்ததற்கான காரணம் என்ன என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக தேர்தல் அறிக்கை!.. பொதுமக்கள் கருத்து கேட்பு!.. முடங்கிய தவெக இணையதளம்...

நாங்க பேசினா விஜய் வெளியே வரமுடியாது!.. ஆர்.பி.உதயகுமார் பேட்டி...

விஜய் வருமானத்தை மறைத்த வழக்கு!.. நாளை வெளியாகிறது தீர்ப்பு...

எப்ஸ்டீனுடன் செலவழித்த நேரத்திற்காக வருந்துகிறேன்!.. மன்னிப்பு கேட்ட பில்கேட்ஸ்!..

மோடியை தாக்க எதிர்கட்சிகள் சதியா?!.. சபாநாயகர் குற்றச்சாட்டு உண்மையா?!...

அடுத்த கட்டுரையில்
Show comments