Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சபாநாயகர் ஆகிறாரா ஓ.பன்னீர் செல்வம்? - சசிகலாவின் அதிரடி திட்டம்

Advertiesment
சபாநாயகர் ஆகிறாரா ஓ.பன்னீர் செல்வம்? - சசிகலாவின் அதிரடி திட்டம்
, வெள்ளி, 6 ஜனவரி 2017 (12:54 IST)
தற்போது தமிழக முதலமைச்சராக உள்ள ஓ.பன்னீர் செல்வம் விரைவில் தமிழக சட்டசபையின் சபாநாயகராக அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின் அவரது தோழி சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், அவரை முதல்வர் இருக்கையில் அமர வைக்க அதிமுக முக்கிய அமைச்சர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை சசிகலாவிடம் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. 
 
எனவே, பன்னீர் செல்வத்திடமிருந்து பொருளாலர் பதவியும் விரைவில் பறிக்கப்படும் எனத் தெரிகிறது. ஒரே சமயத்தில் முதல் அமைச்சர் மற்றும் பொருளாலர் ஆகிய இரண்டு பதவிகளையும் பறித்தால் அது தனக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தலாம். மேலும்,  அவர் தன்னுடைய ஆதரவாளர்களை சேர்த்துக்கொண்டு தங்களுக்கு எதிராக செயல்பட துவங்கினால் அது தங்களுக்கு பாதமாக அமைய வாய்ப்பிருப்பதாக சசிகலா தரப்பினர் கருதுகிறார்களாம். 
 
எனவே அவர் சபாநாயகராக விரைவில் அறிவிக்கப்படலாம். அப்போது அவராகவே பொருளாலர் பதவியை ராஜினாமா செய்து விடுவார். மேலும், அவரிடமிருந்து அதிகாரங்களை பறித்து கொள்ளலாம், கட்சி விவகாரங்களிலும் அவர் தலையிட முடியாது என கருதுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடி எதிர்ப்பால் இணையத்தளத்தில் ஆபாச தாக்குதல்: ஜோதிமணி புகார்