தமிழக சட்டசபையின் முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிர்ச்சியளிக்கும் பல்வேறு தகவல்களை அவர் கூறினார்.
மறைந்த முதல்வர் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவர் பல்வேறு மர்மங்களை அவர் எழுப்பினார். ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவதற்கு முன்னரே, போயஸ் கார்டனில் அவருக்கும், சசிகலா தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. அதில் அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். அதன்பின்னரே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அது கேள்விப்பட்டு உடனடியாக நான் அப்பல்லோ விரைந்தேன். ஆனால், அவரை சந்திக்க என்னை அனுமதிக்கவில்லை. நான் தினமும் மருத்துவமனை சென்றேன். ஜெ.வின் உடல் நிலை பற்றிய தகவல்களை அவரின் மெய்காப்பாளர்கள், அவர் சாப்பிட்டார்.. பேசினார் என ஏதோ கிளிப்பிள்ளை போல் பேசி வந்தனர்.
முக்கியமாக, டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக, மருத்துவர்கள் என்னிடம் கூறினார். அப்போது சசிகலாவும், சில அமைச்சர்களும் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தனர். ஆனால், அவர்களிடத்தில் ஒரு சொட்டு கண்ணீர் இல்லை. அவர்களின் முகத்தில் எந்த துக்கமும் இல்லை. இதைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.
ஜெ. மறைந்து சில நாட்களிலேயே, சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றுக் கொண்டார். மேலும், தற்போது, அவர் முதலமைச்சராக நியமிக்கப்படுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. இதை நான் எதிர்க்கிறேன்” என அவர் கூறினார்.